Published : 24 Oct 2022 06:22 PM
Last Updated : 24 Oct 2022 06:22 PM
சென்னை: தமிழகத்தில் 4 நாட்களுக்கு லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி: நேற்று மாலை மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நேற்று மாலை 5.30 மணியளவில் புயலாக வலுப்பெற்று இன்று காலை 8.30 மணி அளவில் வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில், சாகர் தீவுகளுக்கு தெற்கே 380 கிலோமீட்டர் தொலைவிலும், வங்க தேசத்துக்கு தெற்கு-தென்மேற்கே 520 கிலோமீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.
இதுமேலும் வடக்கு வட-வடகிழக்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுபெறக்கூடும். அதன்பின்னர் வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து அக்டோபர் 25-ம் தேதி அதிகாலை வங்கதேச கடற்கரையில் டிங்கோனா தீவு மற்றும் சந்திவிப் இடையில் கரையை கடக்கக்கூடும்.
இதன் காரணமாக இன்று (24-ம் தேதி ), ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், கடலூர், நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.
25ம் தேதி முதல் 27ம் தேதி வரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், கடலூர், நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.
28-ஆம் தேதி, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT