Published : 24 Oct 2022 11:33 AM
Last Updated : 24 Oct 2022 11:33 AM
சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள திருக்கோயில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் தீபாவளி பண்டிகையை காலை முதலே சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
தீபாவளி பண்டிகையையொட்டி புத்தாடைகள் அணிந்து, காலை முதலே குடும்பத்துடன், தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கோயில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். சென்னை வடபழனியில் உள்ள முருகன் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதசாமி திருக்கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம், பழனி திருக்கோயில், திருச்செந்தூர் உள்ளிட்ட இடங்களில் தீபாவளி பண்டிகையையொட்டி நடந்த சிறப்பு வழிபாடுகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா பெருந்தொற்று காரணமாக ஏராளமான கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை விதிக்கப்பட்டிருந்தன. இதனால், பக்தர்கள் திருவிழா நாட்களில்கூட கோயில்களில் இறை வழிபாட்டில் பங்கேற்க முடியாத சூழல் நிலவி வந்தது. இதன் காரணமாக பண்டிகை நாட்கள் வழக்கமான உற்சாகம் இல்லாமல் இருந்து வந்தது.
இந்தாண்டு, பெருந்தொற்றுப் பரவலின் தாக்கம் குறைந்து காணப்படுவதால், பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். இதனால், தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT