Published : 24 Oct 2022 06:09 AM
Last Updated : 24 Oct 2022 06:09 AM

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் ஏஆர்எம்ஓ பணிக்கான கலந்தாய்வில் அனைத்து மருத்துவர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும்: மருத்துவர்கள் வேண்டுகோள்

சென்னை: தமிழகத்தில் 37 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் உள்ளன. இங்கு காலியாக இருந்தடீன் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பணியிடங்களும் நிரப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் காலியாக உள்ள உதவி நிலைய மருத்துவர் (ஏஆர்எம்ஓ) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மருத்துவக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. அதில், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் விண்ணப்பிக்கலாம் எனதெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கானகலந்தாய்வு விரைவில் நடைபெறஉள்ளது. இதற்கு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் அரசு மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு தலைவர் எஸ்.பெருமாள்பிள்ளை மற்றும் மருத்துவர்கள் கூறியதாவது: ஏஆர்எம்ஓ பணிஎன்பது நிர்வாகம் சார்ந்தது.மருத்துவர்கள், மருந்துகள் இருப்பை கண்காணித்தல், பிரேதப் பரிசோதனை முடிந்த பின்னர் உடல்களை ஒப்படைத்தல், மருத்துவமனை பிரச்சினைகளை கையாளுதல் போன்ற பணிகளைஏஆர்எம்ஓ செய்கின்றனர். ஏஆர்எம்ஓ பணிக்கு எம்பிபிஎஸ் தான் கல்வித்தகுதி. என்றாலும், பட்டமேற்படிப்பு முடித்த மருத்துவர்கள் அதிகம் இருப்பதால், அவர்கள் ஏஆர்எம்ஓ-வாக நியமனம் செய்யப்படுகின்றனர்.

மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் அனுபவம் வாய்ந்த மருத்துவர்களுக்கு ஏஆர்எம்ஓ பணி வழங்கப்படுகிறது. தற்போது மருத்துவக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் மட்டும் ஏஆர்எம்ஓ பணிக்கு விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.மாவட்ட தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். ஏஆர்எம்ஓ பணிக்கான கலந்தாய்வில் அனைத்து மருத்துவர்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும். ஏஆர்எம்ஓ காலிப் பணியிடங்களின் விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x