Published : 18 Nov 2016 09:32 AM
Last Updated : 18 Nov 2016 09:32 AM

தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மூன்றாவது அகல ரயில் பாதை பணி ரூ.256 கோடியில் தொடக்கம்

தாம்பரம் -செங்கல்பட்டு இடையே ரூ.256 கோடியில் மூன்றாவது அகல ரயில் பாதை அமைக்கும் திட்டத்தில், முதல் கட்டமாக, 73 பாலங்களை கட்டும் பணி தொடங்கியுள்ளது.

சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில், மக்கள்தொகை பெருகி வருவதைத் தொடர்ந்து போக்குவரத்து தேவைகளும் அதி கரித்து வருகின்றன. குறிப்பாக குறைந்த கட்டணம், சவுகரியமான பயணம் போன்ற காரணங்களால் ரயிலில் செல்பவர்களின் எண் ணிக்கை அதிகரித்து வருகிறது. தென் தமிழகத்தில் இருந்து வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதைத் தொடர்ந்து சென்னையில் சென்ட்ரல், எழும் பூர் ரயில் முனையங்களுக்கு அடுத்ததாக, மூன்றாவதாக தாம்பரத்தில் ரயில் முனையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த 2013-ம் ஆண்டு தாம்பரத்தில் புதிய ரயில் முனையம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு, நடந்து வருகிறது.

தாம்பரம் - செங்கல்பட்டு இடையே தற்போது இரண்டு ரயில் பாதைகள் மட்டுமே உள்ளன. இந்த மார்க்கத்தில் தினமும் 80 மின்சார ரயில்கள் இயக்கப் படுகின்றன. மூன்றாவது முனை யம் அமைவதால், இந்த மார்க் கத்தில், ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்பதால், கூடுதல் ரயில் பாதைகள் அமைக்க வேண்டும் என, பல்வேறு தரப்பினர் மத்தியில் கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து, செங்கல்பட்டு - தாம்பரம் இடையே 30 கிலோ மீட்டர் தூரத்துக்கு, ரூ.256 கோடியில் மூன்றாவது புதிய அகல ரயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு, கடந்த பிப்ரவரி மாதம், மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபாகர் பிரபு அடிக்கல் நாட்டினார். இந்த திட்டத்துக்கான பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. முதல் கட்டமாக, மூன்றாவது வழித்தடம் அமைய உள்ள பகுதி யில், பாலங்கள் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.

இது குறித்து ரயில்வே கட்டு மான பிரிவு பொறியாளர் ஒருவர் கூறும்போது, “மூன்றாவது ரயில் பாதை அமைக்கும் பணி தற்போது தொடங்கியுள்ளது. வரும் 2017-ம் ஆண்டுக்குள் இதை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பெரிய பாலங்கள், சிறிய பாலங்கள், நடைமேடை, சிக்னல், தண்ட வாளம் உள்ளிட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஒவ்வொன் றுக்கும் தனித்தனி டெண்டர்கள் விடப்பட்டுள்ளன” என்றார்.

இந்த மூன்றாவது வழித்தடம் செயல்பாட்டுக்கு வரும்போது, செங்கல்பட்டு முதல் தாம்பரம் வரை, விரைவு ரயில்கள் தனி பாதையில் செல்ல வழிவகுக்கும். இதனால் பயண நேரம் குறையும். மேலும் தற்போது இயக்கப்படும் ரயில் சேவைகளை அதிகரிக்க வழி ஏற்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x