Published : 22 Oct 2022 05:30 AM
Last Updated : 22 Oct 2022 05:30 AM

சார் பதிவாளர் அலுவலகங்கள் இன்று இயங்காது

சென்னை: தமிழகத்தில் சனிக்கிழமைகளில் இயங்கும் 100 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அளித்து பதிவுத் துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘சனிக்கிழமைகளில் இயங்கும் 100 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு அக்.22-ம் தேதி (இன்று) ஒருநாள் மட்டும் செயல்பாட்டில் இருந்து விலக்களித்து விடுமுறைவழங்க, தமிழ்நாடு சார்பதிவாளர் சங்கத்திடம் இருந்து கோரிக்கை வந்தது.

இதை ஏற்று 100 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு அக்.22-ம் தேதி ஒருநாள் மட்டும் அலுவலக செயல்பாட்டில் இருந்து விலக்குஅளிக்கப்படுகிறது. இனிவரும்சனிக்கிழமைகளில் அந்த அலுவலகங்கள் வழக்கம்போல செயல்படும்’ என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x