Published : 22 Oct 2022 12:18 AM
Last Updated : 22 Oct 2022 12:18 AM
புதுச்சேரி: தீபாவளிக்கு அடுத்த நாளான செவ்வாய்க்கிழமை புதுச்சேரி, காரைக்கால் உட்பட அனைத்து பிராந்தியங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படும் என்று கல்வியமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.
புதுச்சேரி உள்துறை மற்றும் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர்களிடம் பேசுகையில், "புதுச்சேரி மாநில நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும் முன்பாக பிரதமரை சந்தித்து கூடுதல் நிதியை புதுச்சேரிக்கு ஒதுக்கி தர முதல்வர் ரங்கசாமி கோரிக்கை வைத்தார். நிதிநிலை அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளதால், திருத்திய மதிப்பீட்டில் பரிசீலிப்பதாக தெரிவித்தனர். தற்போது ரூ.1400 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிதி முழுவதும் புதுச்சேரி வளர்ச்சிக்கு பயன்படுத்த முதல்வர் உரிய திட்டங்களை வகுத்து பெஸ்ட் புதுச்சேரியை உருவாக்க நடவடிக்கை எடுப்பார்.
விளையாட்டுக்கு தனித்துறை உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பிப்டிக் நிறுவனத்தின் துணைநிறுவனத்தின் மூலம் இணையதள சேவை, தொலைபேசி சேவை, தொலைக்காட்சி சேவை மூன்றும் ஒருங்கிணைந்து குறைந்த விலையில் தர உள்ளோம்.
வேகமாக இணையதள சேவை ஏற்படுத்த முடியும். பிப்டிக் பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்களில்
பள்ளி, கல்லூரிகளுக்கு செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
ஆன்லைன் ரம்மி தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். ஏனாமில் சூதாட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். புதுச்சேரியில் தனிக்கல்வி வாரியம் அமைக்க ஆணை பிறப்பித்துள்ளோம். எனினும் கூடுதல் நிதி தேவைப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கூடுதல் நிதி ஒதுக்கினால் மற்ற நலத்திட்டம் பாதிக்கப்படும். அதை மறுபரிசீலனை செய்து, சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு மாறினால் செலவு குறையும். அதனால் இம்முடிவு எடுத்துள்ளோம். மின்துறையினருடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். அதனால் விலக்கி கொண்டனர். தொடர்ந்து ஆலோசனை நடந்து வருகிறது. தீபாவளிக்கு பிறகு மீண்டும் மின்துறையினரை அழைத்து பேசி சுமூக முடிவு எடுப்போம்" என்று குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT