Published : 21 Oct 2022 07:40 PM
Last Updated : 21 Oct 2022 07:40 PM
சென்னை: சென்னையில் 20 கிராமங்களில் தொல்லியல் துறை இடங்கள் உள்ளதாக சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் அறிவித்துள்ளது.
சென்னையில் உள்ள தொல்லியல் துறை இடங்கள் வரைபடங்களை (Archaeological Sensitive Area Maps) சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் வெளியிட்டுள்ளது. இதன்படி அத்தன் தாங்கல், சிக்கராயபுரம், எருமையூர், கிளாம்பாக்கம், குன்றத்தூர், மாடம்பாக்கம், நெடுங்குன்றம், வண்டலூர், பல்லவாரம், போரூர், புழல், செம்பாக்கம், சித்தலாப்பாக்கம், செயின்ட் தாமஸ் மவுண்ட், திருநீர்மலை, திரிசூலம், தண்டையார்பேட்டை, வஉசி நகர் உள்ளிட்ட கிராமங்கள் தொல்லியல் துறை இடங்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த இடங்கள் தொடர்பாக வரைபடம் http://cmdalayout.com/ArchaeologicalSensitiveAreaMaps/ASAmaps.aspx என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் எந்த இடங்களுக்கு தொல்லியில் துறையின் தடை இல்லா சான்று பெற முடியும் என்பதை தெரிந்துகொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT