Published : 20 Oct 2022 03:05 PM
Last Updated : 20 Oct 2022 03:05 PM
சென்னை: பசுமை தமிழகம் திட்டத்தில் இந்தாண்டு நட வேண்டிய 2.50 கோடி மரக்கன்றுகளையும் இந்த வடகிழக்கு பருவமழைக் காலத்திலேயே நட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தின் வனப் பரப்பை 33 சதவீதமாக உயர்த்திட தொடங்கப்பட்ட பசுமை தமிழக இயக்கத்தின் மூலம் இந்தாண்டு நட வேண்டிய 2.80 கோடி மரக்கன்றுகள் நடும் பணி குறித்த ஆய்வுக் கூட்டம் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் இதுவரை 7905 தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளதாகவும், 12 ஆயிரத்து 705 மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்தாண்டு நடவு செய்யப்பட வேண்டிய 2.80 கோடி மரக்கன்றுகளையும் நடப்பு மழைக்காலத்திலேயே நடவு செய்திட அலுவலர்கள் முனைப்புடன் பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
மேலும், இந்த இயக்கத்தின் திட்டப்படி 10 ஆண்டுகளுக்குள் தமிழகத்தின் வனப் பரப்பை 33 சதவீதமாக உயர்த்திட இனி வரும் ஒவ்வொரு ஆண்டும் நடவு செய்யப்பட வேண்டிய மரக்கன்றுகளை வளர்க்கவும், நடவு செய்திடவும், முழுமையாக வளர்ந்த பிறகு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும் சரியாக திட்டமிட வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அமைச்சர் ராமச்சந்திரன் அறிவுறுத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT