Published : 16 Nov 2016 10:04 AM
Last Updated : 16 Nov 2016 10:04 AM

சொரியாசிஸ் நோய்க்கு இலவசமாக மருந்து:பிரதிபலன் எதிர்பாராமல் உதவும் மதுரை பாத்திர வியாபாரி

சொரியாசிஸ் நோயைக் கட்டுப் படுத்தலாம். முழுவதுமாகக் குணப் படுத்த முடியாது என பரவ லாக கருதப்படுவதால், இந்நோயால் பாதிக்கப்பட்டோர் அச்சமடைந்து மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். அதனால், அச்சமே அவர்களுக்கு பெரிய நோயாக உருமாறிவிடுகிறது.

மதுரையில் வெப்பாலை மூலிகை மர இலை தைல மருந்தை பாதிக்கப்பட்ட இடங்களில் தடவி, இந்நோயில் இருந்து மீண்ட கீழவாசல் பாத்திரக்கடை வியாபாரி தினகரன்(50), தான் பெற்ற பயனை மற்ற நோயாளிகளும் பெற, அவர்களுக்கு மூலிகை தைலத்தை அவரே தயாரித்து இலவசமாக விநியோகம் செய்துவருகிறார்.

இதற்காக பிரத்யேகமாக இயந் திரங்களை வாங்கி, தனது கடையின் ஓர் அறையில் வெப்பாலை மருந்து தயாரிப்புக் கூடத்தை உருவாக்கி உள்ளார். உள்நாட்டில் இருக்கும் நோயாளிகளுக்கு மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருக்கும் நோயாளிகளுக்கும் வெப்பாலை தைலத்தை எந்தப் பிரதிபலனும், விளம்பரமும் இல்லாமல் அனுப்பி வைக்கிறார். இந்த மனிதநேய செயல்பாட்டால் 2,000-க்கும் மேற் பட்டோர் பலனடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து தினகரன் கூறிய தாவது: 1994-ம் ஆண்டு தலையில் சொரியாசிஸ் ஏற்பட்டது. 40-க்கும் மேற்பட்ட மருத்துவர்களிடம் காட்டி யும் கடந்த 20 ஆண்டுகளாக நோய் குணமாகவில்லை. ஒருகட்டத்தில் உடல் முழுவதும் பரவி மிகவும் அவதிப்பட்டேன். ரத்த அழுத்தம் அதிகமாகிவிட்டது. இதனால், வியாபாரத்திலும் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை. 2014-ம் ஆண்டு கடைக்கு பாத்திரம் எடுக்க வந்த சித்த மருத்துவர் ஒருவர் என்னைப் பார்த்து பரிதாபப்பட்டு, ‘வெப்பாலை மூலிகை மர இலையை 4, 5 நாள் வெயிலில் காய வைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு உடம்பில் தேய்த்தால் குணமாகிவிடும்’ என்று சொன்னார்.

நானும், அவர் சொன்னதைச் செய்தேன். இரண்டு, மூன்று நாட் களிலேயே குணமானது. நீர், ரத்தக் கசிவு நின்றது. ஆச்சரிய மடைந்த நான், அதன்பின் அந்த மருத்துவர் சொன்ன வெப்பாலை இலைகளை பறித்து வந்து தேங்காய் எண்ணெயில் கலந்து தேய்க்க ஆரம்பித்தேன்.

தனது கடையில் உருவாக்கியுள்ள வெப்பாலை தைலம் தயாரிப்புக் கூடத்தில் தினகரன்.

தற்போது 2 ஆண்டுகளாக எந்த பிரச்சினையுமின்றி நிம்மதியாக தூங்குகிறேன். எப் போதாவது ஒருமுறை லேசாக பாதிப்பு வரும். தைலத்தைத் தேய்த் தால் உடனே குணமாகிவிடும். எனது கடைக்கு தினமும் ஏராளமானோர் வருவார்கள். அவர்களில் சிலருக்கு சொரியாசிஸ் இருக்கும். நான் அவர்களுக்கு மூலிகை தைலத்தை இலவசமாக வழங்குகிறேன். இதில் ஒரு சந்தோஷம் கிடைக்கிறது என்றார்.

நோயாளிகளே தயாரிக்கலாம்

மதுரை மாவட்ட அரசு சித்த மருத்துவ அலுவலர் மாரியப்பன் கூறியதாவது: வெப்பாலை மூலிகை தைலம் சொரியாசிஸுக்கு நல்ல மருந்துதான். 95 சதவீதம் குணமாகி விடும். மீதி 5 சதவீதம் எங்காவது ஒரு இடத்தில் இருக்கத்தான் செய்யும். உணவு பழக்கவழக்கம் மற்றும் மற்ற மருந்து, மாத் திரை சாப்பிடும்போதும், சுற்றுச் சூழலாலும், பக்க விளைவு ஏற்பட் டாலும் மீண்டும் சொரியாசிஸ் வரும். குறிப்பாக எதனால் இந் நோய் வருகிறது என கண்டு பிடிக்கப்படவில்லை. வெப்பாலை தைலத்தை சொரியாசிஸ் வந்த இடங்களில் தடவலாம். குளிக்கவும் செய்யலாம் என்றார்.

திருநெல்வேலி மாவட்ட அரசு சித்த மருத்துவ அலுவலர் விக்ரம் குமார் கூறியதாவது: இந்தத் தைலத்தை நோயாளிகளே தயாரிக் கலாம். வெப்பாலை மர இலைகளை பறித்து சிறிது சிறிதாக நறுக்கி, தேவையான அளவு தேங்காய் எண்ணெயைப் பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு, அதில் நறுக்கிய வெப்பாலை இலைகளை போட்டு 7 நாட்கள் தொடர்ந்து வெயிலில் வைக்க வேண்டும். அதன்பின், இந்த எண்ணெயை வடிகட்டி, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி இளம் வெயிலில் நின்றால் சொரியாசிஸ் நோய்க்கு நல்ல பலன் கிடைக்கும் என்றார்.

ராமநாதபுரம் மாவட்ட அரசு சித்த மருத்துவர் வெங்கட்ராமன் கூறும்போது, “வெப்பாலை தைலத்தைப் பாதிக்கப்பட்ட இடங் களில் மருத்துவர் ஆலோசனை இல்லாமலேயே தடவலாம். சாப்பிடு வதாக இருந்தால் மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றே சாப்பிட வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x