Published : 19 Oct 2022 04:00 AM
Last Updated : 19 Oct 2022 04:00 AM

இன்றும், நாளையும் கோவை வழியாக செல்லும் 3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம்

கோவை

இன்றும், நாளையும் கோவை வழியாக செல்லும் 3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என அறிவிக்கப்படுள்ளது.

இது தொடர்பாக, சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “கோவை-போத்தனூர் ரயில்நிலையங்களுக்கு இடையே 2 நாட்கள் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், இன்று (அக்.19) பிற்பகல் 3.42 மணிக்கு கோவை ரயில்நிலையம் வந்தடைய வேண்டிய பிலாஸ்பூர் - திருநெல்வேலி இடையிலான வாராந்திர எக்ஸ்பிரஸ் (எண்:22619) ரயில், இருகூர் - போத்தனூர் மாற்றுப் பாதையில் இயக்கப்படும்.

இந்த ரயில் கோவை ரயில்நிலையத்துக்கு பதில் போத்தனூர் ரயில்நிலையத்தில் நின்று செல்லும். இதேபோல, இன்று பிற்பகல் 3.07 மணிக்கு கோவை ரயில்நிலையம் வந்தடைய வேண்டிய திருநெல்வேலி-தாதர் இடையிலான வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:22630), இருகூர்-போத்தனூர் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.

இந்த ரயில், கோவை ரயில்நிலையத்துக்கு பதில் போத்தனூர் ரயில்நிலையத்தில் நின்று செல்லும். நாளை (அக்.20) பிற்பகல் 3.02 மணிக்கு கோவை ரயில் நிலையம் வந்தடைய வேண்டிய பாட்னா-எர்ணாகுளம் இடையிலான வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:22670), இருகூர்-போத்தனூர் மாற்றுப் பாதையில் இயக்கப்படும்.

இந்த ரயில், கோவை ரயில்நிலையத்துக்கு பதில் போத்தனூர் ரயில்நிலையத்தில் நின்று செல்லும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x