Published : 21 Nov 2016 03:13 PM
Last Updated : 21 Nov 2016 03:13 PM
பழநியில் பக்தர்கள் புனிதநதியாகக் கருதும் சண்முகநதி பராமரிப்பு இன்றியும், நீராட எந்தவித அடிப் படை வசதிகள் செய்துதரப் படாமலும் உள்ளதால் பக்தர் கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்ற னர். நதியை பாது காக்க மாவட்ட நிர்வாகம் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகனின் அறுபடை வீடுக ளில் மூன்றாம் படை வீடு என அழைக்கப்படுகிறது. மலைக் கோயிலுள்ள தண்டாயுதபாணி சுவாமி, திருஆவினன்குடியிலுள்ள குழந்தைவேலப்பர், ஊர் கோயில் என்றழைக்கப்படும் பெரிய நாயகியம்மன் (பார்வதி) கோயில், ஊருக்கு வெளியே சண்முகநதிக் கரையில் அமைந்துள்ள பெரியா வுடையார் (சிவன்) கோயில் ஆகியவற்றை தரிசிக்க தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளி நாடுகளைச் சேர்ந்த பக்தர்கள் திர ளாக வந்துசெல்கின்றனர். திரு விழாக்காலங்கள் மட்டுமின்றி அனைத்து நாட்களிலும் பழநிக்கு பக்தர்கள் வருகை தொடர்ச்சியாக உள்ளது. பழநி வரும் பக்தர்கள் புனிதநீராடும் நதியாக சண்முகநதி கருதப்படுகிறது. முடிகாணிக்கை செலுத்துபவர்கள் மட்டுமின்றி காவடி எடுத்துவருபவர்கள், பாத யாத்திரையாக வருபவர்கள் என அனைவரும் நீராடிவிட்டு மலைக் கோயிலுக்கு செல்வது வழக் கம்.
புனிதநதியின் இன்றையநிலை பரிதாபத்துக்குரியதாக உள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நதியின் குறுக்கே புதிய பாலம் கட்டப்பட்டது. பழைய பாலம் முற்றிலும் அகற்றப்படாமல் அதன் இடிபாடுகள் இன்றும் நதிக்குள்ளேயே கிடக்கிறது. மணல் திருட்டால் நதி கட்டாந்தரையாக காணப்படுகிறது. இருக்கும் சிறிது நீரிலும் ஆகாயத்தாமரை செடிகள் ஆக்கிரமித்துக் கொள்கின்றன. இவை நீராடச் செல்லும் பக்தர் களுக்கு சிரமத்தை ஏற்படுத் துகின்றன. நீர் அதிக அளவில் செல்லும் சிலநேரங்களில் இவற் றால் பக்தர்களுக்கு ஆபத் தும் ஏற்படுகிறது. பக்தர்கள் உடைமாற் றும் அறை, பொருட்கள் வைப்பு அறை என முறையான வசதிகள் எதுவும் செய்து தரப்பட வில்லை. இதனால் பக்தர்கள் சிரமம் நாள் தோறும் தொடர்கிறது.
இதுகுறித்து பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் ஜெய ராமன் கூறியதாவது:
சண்முக நதியை பராமரிப்பதற்கு என எங்களிடம் எந்த திட்டமும் இல்லை. கோயில் நிர்வாகம் நிதி ஒதுக்கினால் அவர்களுடன் இணைந்து சண்முகநதியைப் பரா மரித்து, பக்தர்களுக்கு தேவை யான வசதிகளை மேற்கொள் ளலாம். பொதுப்பணித் துறை சார்பில் கோயிலுக்கு தொடர்ந்து தண்ணீர் கொடுத்து வருகிறோம். விழாக் காலங்களில் மட்டும் சண்முகநதியை பராமரிக்க பொதுப்பணித்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கிறோம். நதியை பராமரிப்பதற்கு என நிரந்தர திட்டம் எதுவும் இல்லை என்றார்.
சண்முகநதியைக் காக்க திட்டங்கள் பலமுறை தயாரித்தும் பலனில்லாத நிலையில், மீண்டும் அரசின் நிதியை எதிர்பார்ப்பதைவிட தன்னார்வலர்கள், சமூக சேவகர் களை ஒருங்கிணைத்து சண்முக நதியைக் காக்க மாவட்ட நிர்வாகம் முயற்சி மேற்கொண்டால் புனிதநதி மீண்டும் புதுப்பொலிவு பெறும். பக்தர்களின் நம்பிக்கையைக் காக்கவும், புனிதநதியைப் பாது காக்கவும் மாவட்ட நிர்வாகம் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.
ஆறுமுகங்கள் கொண்ட சண்முகநதி
முருகப்பெருமானுக்கு ஆறுமுகங்கள் உள்ளதால் ஆறுமுகப் பெருமான் என்ற பெயரும் உண்டு. இதேபோல் சண்முகநதிக்கும் ஆறு முகங்கள் உண்டு. அதாவது ஆறு நதிகள் இணைந்து உருவானதுதான் சண்முகநதியாகும். பாலாறு, பொருந்தலாறு, வரட்டாறு, காணாறு, கல்லாறு, பச்சையாறு ஆகிய 6 நதிகள் இணைந்தே சண்முகநதி உருவாகிறது. ஆறுமுகம் கொண்ட முருகனைப்போல இந்த நதிக்கும் ஆறுமுகங்கள் உண்டு என்ப தால் சண்முகநதி புனிதநதியாகக் கருதப்படுகிறது. பழநி வரும் பக்தர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் சண்முக நதியைப் பாதுகாக்கவேண்டியது அனைவரின் கடமையாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT