Published : 18 Oct 2022 11:21 AM
Last Updated : 18 Oct 2022 11:21 AM
மத்திய அரசின் திட்டங்களை ஆய்வு செய்வதற்காக தமிழகத் துக்கு மத்திய அமைச்சர்கள் படையெடுத்து வருவதால் பாஜவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் மத்திய அரசுத் திட்டங்களை மாநில அரசு தங்களின் திட்டம் போல் மக்கள் மத்தியில் காட்சிப்படுத்தி வருவதாகவும், மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டும் பணியைச் செய்து வருவதாகவும் பாஜக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மத்திய அரசின் திட்டங்களின் பயனை மக்களுக்குப் பட்டியலிட வேண்டிய நிலையில் பாஜக உள்ளது.
இதையடுத்து, தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசின் திட்டங்களை மத்திய அமைச்சர்களை நேரில் அனுப்பி ஆய்வு செய்து, திட்ட உதவிகளைப் பயனாளிகளுக்கு நேரில் வழங்கும் பணியை பாஜக தொடங்கியுள்ளது. இந்த மாதத்தில் மட்டும் இதுவரை 19 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வந்து மத்திய அரசின் திட்டங்களை ஆய்வு செய்துள்ளனர். அடுத்த 20 நாளில் மேலும் 50 மத்திய அமைச் சர்கள் தமிழகத்துக்கு ஆய்வுக்கு வரவுள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர்கள் மாநிலங் களுக்குச் சென்று மத்திய அரசின் திட்டங்களை ஆய்வு செய்வது வழக்கமான ஒன்றே. ஆனால், ஒரே நேரத்தில் அமைச்சர்கள் அனைவரும் ஒரு மாநிலத்துக்குச் சென்று மத்திய அரசின் திட்டங்களை ஆய்வு செய்வது தமிழக வரலாற்றில் இதுவே முதன் முறை. தமிழகம் வரும் மத்திய அமைச்சர்கள் அதிகாரிகளுடன் ஆய்வு, மத்திய அரசின் நலத்திட்ட உதவிகளைப் பயனாளிகளுக்கு நேரில் வழங்குவது, அடுத்து கட்சி நிகழ்வில் பங்கேற்பது என நிகழ்ச்சி நிரல் வகுத்துள்ளனர்.
கட்சி நிகழ்வின்போது மத்திய அரசின் நிதியை மாநில அரசு சரியாகச் செலவிடவில்லை, மத்திய அரசு நல்ல அரிசி வழங் குகிறது, ஆனால் மாநில அரசோ மக்களுக்கு மோசமான அரிசியை வழங்குகிறது என மாநில அரசின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்திவிட்டு டெல்லி செல்கின்றனர். இதனால் தமிழக அரசியல் களம் பரபரப்பாகி வருகிறது.
மத்திய அமைச்சர்கள் ஆய்வு என்ற பெயரில் நடத்தும் திடீர் விஜயம் திமுக அரசுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆய்வை அதிமுக முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி கண்டித்துள்ளார். அதே நேரத்தில் தமிழக அமைச்சர் துரைமுருகன் மத் திய அமைச்சர்களின் ஆய்வை வர வேற்றுள்ளார்.
இது குறித்து பாஜகவினர் கூறியதாவது: தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசு தங்களது திட்டம்போல் பிரச்சாரம் செய்து வருகிறது. மத்திய அரசின் திட்டங்களில் பிரதமர் மோடியின் புகைப்படங்கள் இருப்பதில்லை. இதனால் அந்தத் திட்டம் எந்த அரசால் செயல்படுத்தப்படுகிறது என்பதை மக்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை.
இதனால் மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் தெளிவு படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வருவதால் மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும் பணியைத் தொடங்கியுள்ளோம். அதன் ஒரு கட்டம்தான் மத்திய அமைச்சர்களின் ஆய்வுக் கூட் டங்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT