Published : 17 Oct 2022 06:51 AM
Last Updated : 17 Oct 2022 06:51 AM
சென்னை: அதிமுகவின் பொன்விழா ஆண்டு நிறைவடைந்து, 51-வது ஆண்டு இன்று பிறக்கிறது. இதையொட்டி, ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலக கட்டிடம் வண்ண விளக்குகளால் நேற்று அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இதை பழனிசாமி நேற்றுபார்வையிட்டார். பின்னர் இன்றுதமிழகம் முழுவதும் கட்சி சார்பில்நடத்தப்படும் விழாக்கள் தொடர்பாக கட்சியின் மூத்த நிர்வாகிகளான கட்சியின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், கே.ஏ.செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம், செல்லூர் ராஜூ, டி.ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், ஆர்.பி.உதயகுமார், காமராஜ் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். சட்டப் பேரவையில்பங்கேற்பது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
பழனிசாமி தரப்பில் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று காலை 9 மணிக்கு நடைபெறும் விழாவில் பழனிசாமி பங்கேற்று, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி,தொண்டர்களுக்கு இனிப்பு வழங்க உள்ளார். ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தியாகராயநகரில் உள்ள எம்ஜிஆர் இல்லத்தில் காலை 8.30மணிக்கு நடைபெறும் விழாவில் பன்னீர்செல்வம் பங்கேற்று எம்ஜிஆர் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT