Published : 14 Oct 2022 06:15 AM
Last Updated : 14 Oct 2022 06:15 AM
சென்னை: அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம், ஐரோப்பிய வெளியீட்டாளர் எல்ஸ்வயர் இணைந்து வெளியிட்ட, உலகின் உச்சபட்ச 2 சதவீத விஞ்ஞானிகளின் பட்டியலில் பதஞ்சலி நிறுவனர் ஆச்சாரிய பாலகிருஷ்ணா இடம் பெற்றுள்ளார்.
இதுகுறித்து பதஞ்சலி யோகபீடம் அறக்கட்டளை வெளியிட்டசெய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜான் பிஏ லோன்னிடிஸ் குழுவினர் ஐரோப்பாவின் எல்ஸ்வயர் நிறுவனத்துடன் இணைந்து உலகின் டாப் 2சதவீத விஞ்ஞானிகளின் பட்டியலை (https://elsevier.digitalcommonsdata.com/datasets/btchxktzyw/4) வெளியிட்டுள்ளனர். அதில் பதஞ்சலி நிறுவனர் ஆச்சாரிய பாலகிருஷ்ணாவின் பெயர் இடம்பெற்றுள்ளது. இது ஆயுர்வேதம் மற்றும் யோகா பற்றிய அறிவியல் ஆராய்ச்சிக்கு உலக அளவில் கிடைத்த அங்கீகாரமாகும்.
பதஞ்சலி ஆராய்ச்சி அறக்கட்டளையின் கீழ் செயல்படும் பதஞ்சலி ஆராய்ச்சி நிறுவனம் 500 விஞ்ஞானிகளுடன் ஆயுர்வேதத்தை நவீன காலத்துக்கு ஏற்றதாக மாற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இவர்களின் ஆராய்ச்சி முடிவுகள் பல்வேறு சர்வதேச இதழ்களில் வெளியிடப்பட்டு, அவை உலக அளவில் உள்ளஅறிவியல் சமூகத்தின் பாராட்டுகளைப் பெற்று வருகின்றன.
மொழிபெயர்ப்பு நூல்கள்: பதஞ்சலி ஆராய்ச்சி நிறுவனம் மூலிகை கலைக் களஞ்சியத்தின் 109 தொகுதிகளில் 75-ஐ இதுவரை வெளியிட்டுள்ளது. மேலும்ஆயுர்வேதம் மற்றும் யோகா பற்றிய பண்டைய அறிவியல் நூல்கள் மற்றும் ஆவணங்களைப் புதுப்பித்து, பாதுகாத்து நவீனகாலத்துக்கு ஏற்ப மொழிபெயர்த்து வருகிறது. இவை80-க்கும் மேற்பட்ட மொழிகளில்புத்தகங்களாக வெளியாகிஉள்ளன. ஆேராக்கியமான சமுதாயத்தை உருவாக்க உதவும் நோக்கத்துடன் செயல்படும் பதஞ்சலி ஆராய்ச்சி நிறுவனம் கரோனா பெருந்தொற்று காலத்தில் ‘கொரோனில்' என்ற மருந்தைவெளியிட்டது இதற்கு முக்கியமான உதாரணமாகும். இவ்வாறுபதஞ்சலி யோகபீடம் அறக்கட்டளை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT