Published : 05 Jul 2014 10:44 AM
Last Updated : 05 Jul 2014 10:44 AM
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் பகுதியை சேர்ந்தவர் மூக்காண்டி. இவரது மகன் முருகன் (35). கடந்த சில மாதங்களாக மவுலிவாக்கம் கட்டிடத்தில் முருகன் பணியாற்றி வந்துள்ளார். கட்டிட விபத்து பற்றி தகவல் தெரிந்ததும் முருகனின் தந்தை மற்றும் உறவினர்கள் சென்னைக்கு வந்துள்ளனர்.
இந்நிலையில் மூக்காண்டி மற்றும் அவரது உறவினர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவ மனையில் வைக்கப் பட்டுள்ள உடல்களை வெள்ளிக் கிழமை யன்று வந்து பார்த்தனர். அப்போது, மூக்காண்டி பொங்கலுக்கு வாங்கி கொடுத்த லுங்கி மற்றும் பணியனை வைத்து முருகனின் உடலை அடையாளம் காட்டினார். ஆனால், சிறிது நேரத்துக்கு பிறகு அவர் அதை மறுத்தார்
இது தொடர்பாக முருகனின் உறவினர்கள் செந்தில் மற்றும் அழகர்சாமி கூறியதாவது: சம்பவம் நடப்பதற்கு ஒரு நாட் களுக்கு முன்பு தான் செல்போன் மூலம் பேசினோம். கிராமத்தில் கட்டிட வேலை இருக்கிறது ஊருக்கு வந்து விடு என்றோம். ஆனால், அவனோ, கிராமத்தில் சில நாட்களிலேயே வேலை முடிந்து விடும். ஆனால், நான் சென்னையில் ஒரே இடத்தில் வருடக்கணக்கில் பணியாற்றுவேன் என்று கூறினான்.முருகன் தனக்கு பணம் இல்லாவிட்டாலும், வீட்டுக்கு மாதந்தோறும் பணத்தை அனுப்பி விடுவான். ஒரு உடலில் இருந்த லுங்கி பனியனை வைத்து அது முருகனின் உடல் என்று அவனது தந்தை கூறினார். ஆனால் பிறகு மறுத்துவிட்டார். நாங்கள் குழப்பமான நிலையில் இருக்கிறோம். எனவே, டிஎன்ஏ சோதனை நடத்த கோரிக்கை விடுத்துள்ளோம்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT