Published : 16 Nov 2016 06:31 PM
Last Updated : 16 Nov 2016 06:31 PM
கொடைக்கானல் சுற்றுலாத்தலம் புதுப்பொலிவுபெற கிடப்பில் உள்ள திட்டங்களையும், புதிய திட்டங்களையும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் கொண்டுவரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு சுற்றுலா ஆர்வலர் களிடம் ஏற்பட்டு உள்ளது.
கொடைக்கானல் மலைகளின் இளவரசி என அழைக்கப்படுகிறது. உள்நாடு மற்றும் வெளிநாடு என அனைத்து தரப்பு சுற்றுலா பயணிகளையும் கவர்ந்த கொடைக் கானல் கொஞ்சம் கொஞ்சமாக பொலிவை இழந்துவருகிறது என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்துவருகிறது. இதை மீட்டு மீண்டும் புதுப்பொலிவு பெறச்செய்ய வேண்டிய கடமை மாவட்ட நிர்வாகத்திடம் உள் ளது.
இதன் ஒரு கட்டமாக கருத்து கேட்பு கூட்டத்தை மாவட்ட நிர்வாகம் இன்று நடத்துகிறது.
வழக்கமாக சுற்றுலாத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கூடிப்பேசி கலையும் கூட்டமாக இருந்த சுற்றுலா மேலாண்மை கூட் டத்தை முதன்முறையாக தற் போதைய ஆட்சியர் டி.ஜி.வினய் சுற்றுலாஆர்வலர்கள், பொது மக்கள் ஆகியோரின் கருத்துகளை கேட்கும் கூட்டமாக மாற்றியுள்ளார். இதுவரவேற்கத்தக்க ஒன்று.
பயணிகளை கவர ரோப்கார்
அரசின் மூலம் செயல்படுத்த முடியாத திட்டங்களை தனியார் பங்களிப்புடன் செயல்படுத்துவது வழக்கமாக உள்ளது. இந்தமுறை யில் கொடைக்கானலில் ரோப் கார் அமைக்கும் முயற்சி ஆரம்பகட்டத்திலேயே நிற்கிறது. இதை ‘பில்ட், ஆபரேட் அன்டு டிரான்ஸ்பர்’ என்ற முறையில் செயல்படுத்த திட்டமிடப்பட்டது. அதாவது ரோப்கார் அமைக்கும் பணியை தனியார் நிறுவனமே மேற்கொள்ளும். தான் முதலீடு செய்த தொகையை லாபத்துடன் எடுத்தபிறகு அரசிடம் ஒப்படைத்து விடும்.
இந்தமுறையில் கொடைக் கானல் நகராட்சியிலிருந்து ஜிம்கானா மைதானம் வரை சிறிது தூரத்திற்கு ஏரியின் மேல் ரோப்கார் சென்றும்வரை அமைத்தால் சுற்றுலா பயணி களின் வரவேற்பைபெறும். இந்த திட்டத்தை பரிசீலித்து அமல்படுத்த முயற்சி மேற் கொள்ளவேண்டும் என்பது அனைவரின் விருப்பம்.
ஏரியில் நீரூற்று
ஏரியில் படகு சவாரி செய்வதே சுற்றுலாபயணிகளுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. வெளியில் இருந்து ஏரியின் அழகை ரசிக்க ஏரிக்குள்ளேயே வெளிநாடுகளில் உள்ளது போல் நீரூற்று அமைக்க லாம். ஏரிக்குள் இருந்து மேல் பகுதி நோக்கி நீர் வெளியேறி கொட்டும்போது பார்ப்பதற்கு ரம்மியாக இருக்கும். சுற்றுச்சூழல்
சுற்றுலா
வனத்துறை மூலம் செயல் படுத்தப்படும் ‘எக்கோ’ சுற்றுலா முழுமையாக செயல் படுத்தப்படவில்லை. இதற்கென ஒரு வாகனத்தையும் வனத்துறை தயார் செய்து சுற்றுலாபயணிகளை அழைத்துச்சென்று வந்தது. ஆனால் தற்போது இந்ததிட்டம் முடங்கிப்போய் உள்ளது.மத்திய அரசு நிதியுதவியுடன் மன்னவனூரில் ‘மெகாடூரிசம்’ திட்டம் முழுமையாக செயல் படுத்தப்படவில்லை. மத்திய அரசின் நிதியை முழுமையாகப்பெற்று இத்திட்டத்தை முழுமையாக நிறைவேற்றினால் கொடைக்கானல் சுற்றுலா மேம்படும்.
துவக்கநிலையில் உள்ள ‘ஸ்கைவாக்’
திட்டத்தை செயல்பாட்டிற்கு கொண்டுவந்தால் இந்தியாவில் முதன்முறையாக ‘ஸ்கைவாக்’ அமைக்கப்பட்ட பெருமையும் கொடைக்கானலுக்கு கிடைக்கும். மேலும் அதிக சுற்றுலாபயணிகளும் வந்துசெல்வர்.
கேரள மாநில மலைப்பகுதி சுற்றுலாப் பகுதிகளில் உள்ளது போல் வனத்துறை உதவியுடன் ‘டிரக்கிங்’ செல்லும் முறையையும் கொண்டுவரலாம். இதுவும் சுற்றுலாபயணிகளை கவரும். தினமும் மாலை நேரங்களில் கலாச்சாரம், பண்பாடுகள் நிறைந்த கலைநிகழ்ச்சிகளுக்கு சுற்றுலாத்துறையே ஏற்பாடு செய்து நடத்தலாம்.
வாகன நிறுத்த பிரச்சினை
சுற்றுலாபயணிகளுக்கு பெரும் பிரச்சினையாக உள்ளது. வாகனங்களை நிறுத்தும் இடம் இல்லாதது தான். இதற்காக ‘மல்டிலெவல் கார் பார்க்கிங்’ என அடுக்குமாடி கார் நிறுத்தும் இடம் தயார் செய்யும் திட்டமும் கிடப்பில் உள்ளது. இதற்கான இடம் போக்குவரத்து கழகத்திடம் உள்ளதால் அவர்களாகவே இதை நிறைவேற்றச்செய்யும்படி திட் டம் உள்ளது. இதை விரைந்து மேற்கொண்டால் தான் வருங் காலத்தில் கொடைக் கானலில் போக்குவரத்து சிக்கலுக்கு தீர்வு ஏற்படும்.
கொடைக்கானல் சுற்றுலாத் தலத்தை மேம்படுத்த அர சின் நிதியை எதிர்பார்த்து காத்திருக் காமல், தனியார் பங்களிப்புடன் பல திட்டங்களை நிறைவேற்றினால் தான் சுற்றுலாவை மேம்படுத்த முடியும். காரணம் இந்த ஆண்டு சுற்றுலாத்துறை மானி யக் கோரிக்கையில் கொடைக் கானலுக்கு எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை, மேம்பாட் டிற்கு போதுமான நிதியும் ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு மாவட்ட நிர்வாகம் செயல்பட்டால் கொடைக்கானல் சுற்றுலாத் தலத்தை மேம்படுத்த முடியும் என்பதே சுற்றுலாஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT