Published : 04 Apr 2014 11:40 AM
Last Updated : 04 Apr 2014 11:40 AM
ஸ்டான்லி மருத்துவமனையின் 2-வது மாடியில் இருந்து குதித்து நோயாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை குன்றத்தூரை சேர்ந்தவர் ராஜேஷ்(28). டீக் கடை வைத்துள்ளார். தினமும் மது குடித்ததால் அவரது குடலில் பாதிப்பு ஏற்பட்டு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை எடுப்பதற்காக ஸ்டான்லி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். புதன்கிழமை இரவில் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தெரியாமல் அவர் மீண்டும் மது அருந்தினார். இரவு 12.30 மணியளவில் மருத்துவமனை யின் 2-வது தளத்திற்கு சென்றவர் அங்கிருந்து கீழே குதித்து விட்டார். இதில் அவரது தலை மற்றும் உடலில் கடுமையான காயங்கள் ஏற்பட்டன. கீழே விழுந்த சிறிது நேரத்தில் அதே இடத்தில் அவர் இறந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT