Published : 10 Oct 2022 06:58 PM
Last Updated : 10 Oct 2022 06:58 PM
சென்னை: சென்னை முதல் கூடூர் வரை 86 விரைவு ரயில்களின் வேகத்தை 110-ல் இருந்து 130 கி.மீ ஆக அதிகரித்து தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.
அதிக பயணிகள் பயணம் செய்யும் வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில்களில் வேகத்தை அதிகரிக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்தது. இதன்படி சென்னை - கூடூர் வழித்தடத்தில் அனுமதி அளிக்கப்பட்ட உட்சபட்ச வேகத்தில் ரயில்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்த வழித்தடத்தில் மணிக்கு 110 முதல் 130 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டது.
இது தொடர்பான சோதனை ஓட்டம் கடந்த அக்.6-ம் தேதி நடைபெற்றது. இந்தச் சோதனை ஓட்டத்தில் அதிகபட்சமாக 143 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில் இயக்கப்பட்டது. இதன்படி 134 கிலோ மீட்டர் தூரத்தை 84 நிமிடத்தில் ரயில் கடந்து சென்றது.
இந்நிலையில், சென்னை முதல் கூடூர் வரை 86 விரைவு ரயில்களின் வேகத்தை 110-ல் இருந்து 130 கி.மீ ஆக அதிகரித்து தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. இதன்படி, முதல் ரயிலாக சென்னை சென்ட்ரல் - விஜயவாடா ஜன் சதாப்தி விரைவு ரயில் 130 கி.மீ வேகத்தில் இயக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 86 விரைவு ரயில்களின் வேகத்தை 110-ல் இருந்து 130 கி.மீ ஆக அதிகரித்து தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.
With the maiden Run at 130 kmph by 12077 Jan Shatabdi Express, history has been created in Southern Railway. Train no. 12077 left MAS at 0725 hr for its destination BZA with speed 130 kmph. It reached SPE 8 minutes before time. It has passed GDR at 0929, four minutes in advance. pic.twitter.com/UKaO78Xnr6
— DRM Chennai (@DrmChennai) October 10, 2022
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT