Published : 09 Oct 2022 04:00 PM
Last Updated : 09 Oct 2022 04:00 PM

துரைமுருகன் அளித்த 2 பேனாக்கள்; கனிமொழியைப் புகழ்ந்த ஸ்டாலின்: திமுக பொதுக்குழு சுவராஸ்யங்கள்

மு.க.ஸ்டாலினுக்கு பேனா வழங்கிய துரைமுருகன்

சென்னை: திமுக பொதுக்குழு கூட்டம் சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள புனித ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் இன்று (அக்.9) காலை நடைபெற்றது. இந்த பொதுக் குழுவில் நடைபெற்ற சுவராஸ்யங்கள் நிகழ்வுகளின் தொகுப்பு

* பொதுக் குழு கூட்டம் இன்று காலை 10 மணிக்கு சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள புனித ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் தொடங்கியது.

* திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் செய்யப்பட உள்ளதை முன்னிட்டு கருணாநிதி நினைவிடத்தில் "உழைப்பு, உழைப்பு, உழைப்பு அது தான் ஸ்டாலின்" என்று எழுதப்பட்டு இருந்தது.

* பொதுக் குழு கூட்டத்தில் வருகை தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு வழிநெடுகிலும் கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

* திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்தவுடன் மேடைக்கு கீழே அமர்ந்து இருந்தார். திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டதாக உட்கட்சி தேர்தல் ஆணையர் ஆற்காடு வீரசாமி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து மேடையில் வைக்கப்பட்டு இருந்த பெரியார், அண்ணா, கருணாநிதி, அன்பழகன் படங்களுக்கு முதல்வர் மரியாதை செலுத்திவிட்டு மேடையில் வந்து அமர்ந்தார்.

* தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் பெயரில் 2000 ஆயிரத்திற்கு மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

* மேடையில் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள் பெயர்களை தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

* இந்த அறிவிப்பின் போது அனைவரும் பெயருக்கும் ஒவ்வொரு வாசகத்தை குறிப்பிட்டு மு.க.ஸ்டாலின் அழைத்தார்.

* நேருவிற்கு நிகர் நேரு, திண்டுக்கல் வீரர் ஐ.பி, கலைஞரால் அறிவுமுடி என போற்றப்பட்ட பொன்முடி, கலைஞரால் தகத்தாய சூரியன் என அழைக்கப்பட்ட ஆ.ராசா, அடித்தள மக்களுக்காக அயராது உழைக்கும் அந்தியூர் செல்வராஜ், டெல்லியில் ஒலிக்கும் கர்ஜனை மொழி கனிமொழி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

* தலைவராக தேர்வு செய்யப்பட்ட மு.க.ஸ்டாலினுக்கு பொதுச் செயலாளர் துரைமுருகன் 2 பேனாக்களை பரிசாக வழங்கினார்.

* இந்த பொதுக் குழுவில் 5 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

* தலைவராக தேர்வு செய்யப்பட்ட பின்பு பெரியார் திடல், அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x