Published : 20 Nov 2016 02:17 PM
Last Updated : 20 Nov 2016 02:17 PM

வரிசையா தேர்தல் வந்தா எப்படி பொழப்பு நடத்துறது: இடைத்தேர்தல் பற்றி திருப்பரங்குன்றம் தொகுதி மக்கள் கருத்து

இப்படி வரிசையா தேர்தல் வந்தா, எங்க பொழப்பு என்னாவது என வாக்களிக்க வந்த திருப்பரங்குன்றம் தொகுதி மக்கள் இடைத்தேர்தல் பற்றி கருத்து தெரிவித்தனர்.

திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் நேற்று நடை பெற்றது. இத்தேர்தலில் முதன் முதலாக வாக்குகளை பதிவு செய்யும் இளைய தலைமுறையினர் முதல் அண்ணா காலம் முதல் தற்போது வரை தவறாமல் வாக்குகளை பதிவு செய்து வரும் மூத்த குடிமக்கள் வரை வாக்குச்சாவடிகளுக்கு ஆஜராகினர். அப்போது அவர்களில் சிலர் இடைத்தேர்தல் பற்றி தெரிவித்த கருத்துகள்:

அவனியாபுரம் விவசாயி செல்லையா (58) கூறியது: சில மாசத்துக்கு முன்னாடிதான் எம்எல்ஏ தேர்தல் வெச்சாங்க. அதுக்கு சில மாசம் முன்னாடி எம்பி தேர்தல் வெச்சாங்க. இப்பம் இடைத்தேர்தல் என்கிறாங்க. கொஞ்ச நாளில் உள்ளாட்சித்தேர்தல் வரும் என்கிறாங்க. கட்சிக்காரங்க எங்கள ஒரு வேலைக்கும் போகவிட மாட்டேங்கிறாங்க. தொந்தரவு பன்றாங்க. இப்படி வரிசையாக தேர்தல் வந்தால் எப்படி பொழப்பு நடத்துறது என்றார்.

திருப்பரங்குன்றம் திருமலை யூர் கூலித் தொழிலாளி குரு சாமி (60) கூறியது: ஓட்டு போட காசு வாங்கல. எதுக்கு நம்ம ஒட்ட அவ னுங்களுக்கு விக்கணும். நான் கம் யூனிஸ்ட்காரன். இந்த தேர்தல்ல எங்க கட்சி போட்டியிடல. ஆனா, எனக்கு விஜயகாந்த ரொம்ப பிடிக் கும். ஆனா, இந்த தேர்தல்ல அதி முக தோக்கணும். அதனால், திமுக வுக்கு ஓட்டு போட்டேன் என்றார்.

தனக்கன் குளம் துப்புரவு தொழிலாளி பாண்டியம்மாள்,(50) கூறியது: காலைல முதல் வேலையா போய் ஓட்டு போட்டேன். ஓட்டு போடாம மட்டும் இருக்கக் கூடாது. அது நம்ம உரிமை என்றார்.

திருநகர் பள்ளி ஆசிரியை ஜாஸ்மின் (43) கூறியது: தேர் தல் வந்தாலே, ஏதாவது ஒரு ஊருல தேர்தல் வேலைல இருப்போம். தேர்தல் நாளில் வீட்டுல இருந்ததே கிடையாது. அதனால தபால் வாக்கு பதிவு செய்தே பழக்கமாகி விட்டது. இந்த தடவை நான் தேர்தல் வேலைக்கு போகல, முதன் முறையாக, இந்த தேர்தல்லதான் ‘பூத்’ல போய் ஓட்டுப் போட போறேன். அடிக்கடி தேர்தல் வந்தா மக்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் கஷ்டம்தான், என்றார்.

வெள்ளக்கல் குளத்தை சேர்ந்த பின்னியம்மாள், (85) கூறியது: அந்த காலத்துல ஓட்டு போட போனா, ஒரு வடையும், டீயும்தான் கொடுப்பாங்க. இப்ப, கட்சிக்காரங்க வீட்டுக்கே வந்து மறந்திடாம வாங்கம்மா, வாங்கம்மான்னு தாம்பாளத்துல வெத்தல, பாக்கு வைக்காத குறையா கூப்பிடுறாங்க, அதுல அவங்களுக்கு என்ன லாபமோ தெரியல. காலம் ரொம்ப மாறிப் போச்சு, வரும்போது ஆட்டோவுல கூட்டிட்டு வந்தாங்க, திரும்பி போக ஆட்டோ அனுப்பல. அங்க வேலை முடிஞ்சுட்டுலா. அதான் ஆட்டோவுல போய்விடல என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x