Last Updated : 07 Oct, 2022 02:09 PM

 

Published : 07 Oct 2022 02:09 PM
Last Updated : 07 Oct 2022 02:09 PM

புதுச்சேரி மின்துறை தனியார்மயம் | ரூ.2000 கோடி மதிப்பு இடங்களுக்கு வாடகை ரூ.1: வைத்திலிங்கம் எம்.பி. குற்றச்சாட்டு

வைத்திலிங்கம் எம்பி.

புதுச்சேரி: ரூ.2000 கோடி மதிப்பிலான புதுச்சேரி மின்துறை இடங்களுக்கு ரூ.1 மட்டுமே வாடகையை தனியாருக்கு நிர்ணயித்து புதுச்சேரி அரசும், ஆளுநரும் செயல்பட்டுள்ளதாக மக்களவை உறுப்பினரான வைத்திலிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

புதுச்சேரி மக்களவை எம்.பி வைத்திலிங்கம் செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது: ''புதுச்சேரியில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அமல்படுத்தவுள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ள சூழலில் புதுச்சேரி அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்கவேண்டும். இப்பாடத்திட்டம் அமலானால் தமிழுக்கு முக்கியத்துவம் இருக்குமா என்பதை அரசு தெளிவுப்படுத்த வேண்டும். என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக அரசு பொறுப்பேற்றதிலிருந்து பல துறைகளை குழப்பிவிட்டு தற்போது கல்வித்துறையையும் குழப்ப தொடங்கியுள்ளனர். தமிழக பாடத்திட்டம் தமிழுக்கு முக்கியத்துவம் தருகிறது. மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளதன் மூலம் தமிழை புறக்கணிக்கும் சூழல் உருவாகும். முதல்வர் ரங்கசாமி இவ்விஷயத்தில் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.

மின்துறையை தனியார்மயமாக்க டெண்டர் வெளியீட்டைத் தொடர்ந்து மின்துறையினர் போராட்டம் நடத்தினர். மின்துறையை நூறு சதவீதம் தனியார்மயமாக்கும் முடிவு இந்தியாவில் எம்மாநிலத்திலும் இல்லை. இதில் அரசின் நிலையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். குறிப்பாக மின்துறையின் ரூ.2000 கோடி மதிப்பிலான இடங்களை ரூ.1 ரூபாய்க்கு வாடகை தர முடிவு எடுத்துள்ளனர். அத்துடன் மின்துறை சாதனங்களை குறைந்த தொகைக்கு தனியார் பயன்படுத்த அனுமதிக்கவும் டெண்டரில் குறிப்பிட்டுள்ளனர்.

ஆளுநர், முதல்வர், துறை அமைச்சர் அனுமதி இல்லாமல் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்காது. டெண்டர் யாருக்கு தரவேண்டும் என முடிவு எடுத்துதான் இந்த வழிகாட்டுதல்கள் டெண்டரில் இடம் பெற்றுள்ளன. ஏற்கெனவே மதுபான தொழிற்சாலை அனுமதி தொடர்ந்து. மின்துறை தனியார் மயமாக்கும் விஷயத்திலும் அரசும், ஆளுநரின் செயல்பாடும் சந்தேகத்துக்கு உரியதாக உள்ளது. பேச்சுவார்த்தையின் அடிப்படையில் மின்துறை தனியார்மயம் தொடர்பான டெண்டரை வாபஸ் பெறாததன் மூலம் மின்துறையினரையும், மக்களையும் அரசு ஏமாற்றுகிறது'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x