Published : 07 Oct 2022 11:48 AM
Last Updated : 07 Oct 2022 11:48 AM

பாரம்பரிய சுருக்கு வலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதித்திடுக: சென்னையில் மீனவர்கள் போராட்டம் 

சென்னையில் நடந்த மீனவர்கள் போராட்டம்

சென்னை: பாரம்பரிய சுருக்கு வலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி, சுருக்கு வலையைப் பயன்படுத்த அனுமதி வழங்க கோரி சென்னையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடல்பகுதிகளின் வளம் மற்றும் மீன் வளங்கள் பாதிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு, சுருக்கு வலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்க கடந்த 2020-ம் ஆண்டு தமிழக அரசு தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து தமிழகம் முழுவதும் உள்ள மீனவ மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுருக்கு வலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்க தமிழக அரசு அனுமதி வழங்க கோரி, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே கடல்சார் மக்கள் சங்கமம் சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் சுருக்கு வலையைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதாகவும், திமுக ஆட்சிக்கு வந்தால், சுருக்கு வலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதி வழங்கப்படும் என்று கூறப்பட்டு வந்தநிலையில், ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும், சுருக்கு வலையைப் பயன்படுத்துவதற்கான அனுமதி வழங்கப்படவில்லை.

எனவே தமிழக மீனவர்களால் பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் சுருக்கு வலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்க தமிழக அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கன்னியாகுமரி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட கடலோர கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவ மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கைககளில் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x