Published : 22 Nov 2016 09:57 AM
Last Updated : 22 Nov 2016 09:57 AM

ஜன் தன் கணக்குகளில் கறுப்புப் பணம் செலுத்தினால் சிறை: அனைத்து மானியங்களும் ரத்தாகும் என ஆடிட்டர் எச்சரிக்கை

வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள வர்களின் ஜன் தன் வங்கிக் கணக்குகளில் பெருமளவில் கறுப்புப் பணம் செலுத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விவரம் கண்டுபிடிக்கப்பட்டால் கணக்கு வைத்திருப்பவரின் ரேஷன் மானியம் உள்ளிட்ட அனைத்து அரசு மானியங்களும் ரத்தாகும். மேலும் அவர்களுக்கு அதிகபட்சமாக சிறைத் தண்டனை வழங்கப்படும் என்று எச்சரிக்கிறார் ஆடிட்டர் வீ.ரவீந்திரன்.

500, 1000 ரூபாய் நோட்டுகள் பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட நிமிடத்தில் இருந்து, கணக்கில் காட்டாமல் வைத்திருக்கும் 500, 1000 ரூபாய் நோட்டுகளை கணக்கில் வராமலேயே மாற்றிக் கொள்வதற்கு பலரும் பலவிதமான நூதன முறைகளை கையாண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, பிரதமரால் அறிமுகப்படுத்தப்பட்ட ஜன் தன் வங்கிக் கணக்கில் மொத்தமாக பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட ரூபாய்கள் செலுத்தப்பட்டு வருகிறது. இப்படி பணம் செலுத்தப்பட்டால் ஜன் தன் கணக்குதாரருக்கும் அவரது குடும் பத்தினருக்கும் அரசு மானியங்கள் அனைத்தும் ரத்தாகிவிடும் ஆபத்து உள்ளது என்கிறார் சேலம் பட்டயக் கணக்காளர் சங்கத்தின் உதவித் தலைவர் ஆடிட்டர் வீ.ரவீந்திரன்.

30 சதவீத கமிஷன்

இதுகுறித்து ‘தி இந்து’விடம் அவர் கூறியதாவது: ‘‘எனக்குத் தெரிந்தவரை 20 முதல் 30 சதவீதம் வரை கமிஷன் கொடுத்து, பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட நோட்டை பல வழிகளிலும் மாற் றிக் கொண்டிருக்கின்றனர். சில தனியார் நிறுவனங்கள் தங்களிடம் உள்ள கறுப்புப் பணத்தை ஊதிய முன்பணம் என்ற பெயரில் ஊழியர் களுக்கு பல மாதங்களுக்கான ஊதியத்தை இப்போதே வழங்கி வருகின்றன. நெசவாளர்களுக்கு முன்பணம் கொடுக்கின்றனர். வருமான வரி துறையினர் முறையாக விசாரணை நடத்தினால் இப்படி பணம் கொடுத்தவர்களும் அதை வாங்கியவர்களும் பினாமி பரிமாற்ற தடை திருத்த சட்டத்தின் படி சிக்கலில் மாட்டிக் கொள்வர்.

செல்லாத பணத்தை, ஜன் தன் வங்கிக் கணக்குகளில் பெரு மளவில் செலுத்துகின்றனர். ஜன் தன் கணக்கு வைத்திருப்பவர்கள் ரேஷன் மானியம், சமையல் எரிவாயு மானியம், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழில் தொடங்க நிதியுதவி வழங்கும் யு.ஒய்.இ.ஜி.பி. (UYEGP) திட்ட மானியம் உள்ளிட்டவைகளையும் மாநில அரசால் வழங்கப்படும் திருமண உதவித் திட்டம் உள்ளிட்ட பலன்களையும் பெற்று வருகின்றனர்.

கறுப்புப் பணம்

இவர்களில் பலர் தற்போது, யாருடைய கறுப்புப் பணத் தையோ தங்களது வங்கிக் கணக் கில் செலுத்திக் கொண்டிருக் கின்றனர். இப்படி செலுத்துபவர் களுக்கு அரசின் மானிய சலுகை கள் அனைத்தும் ரத்தாகும் வாய்ப் புள்ளது.

இதை யாரும் உணர வில்லை. இப்படிச் செலுத்தப்படும் பணமானது இன்னொருவருக்குச் சொந்தமானது என்று தெரிய வந்தால் பினாமி பரிமாற்ற தடை சட்டத்தின்படி, ஜன் தன் கணக்குதாரர்களும் சிறை செல்ல வேண்டி இருக்கும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x