Published : 05 Oct 2022 12:44 PM
Last Updated : 05 Oct 2022 12:44 PM

சைவத்தையும் வைணவத்தையும் ஒன்றிணைத்தது 'இந்து' என்ற சொல்தானே? - திருமாவளவனுக்கு நாராயணன் திருப்பதி பதில்

கோப்புப்படம்

சென்னை: "இந்து என்பது ஒரு மதமல்ல, வாழ்க்கை முறை. இந்தியா என்கிற இந்துஸ்தானத்தில் இருப்போர் அனைவரும் இந்துக்கள்தான் என்றே நாம் சொல்கிறோம்" என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தலைவர் திருமாவளவனுக்கு ட்விட்டரில் பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி பதிலளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ராஜராஜ சோழன் காலத்தில் சைவம் வேறு; வைணவம் வேறு. திருநீறு பட்டை வேறு; திருமண் நாமம் வேறு. இரண்டும் வெளிப்படையாக மோதிக்கொண்டன. குருதிச் சேற்றில் தலைகள் உருண்டன. மாறிமாறி மதமாற்றம் செய்து கொண்டன. அக்காலத்தில் ஏது இந்து? இக்காலத்து லிங்காயத்துக்களே தாங்கள் இந்துக்கள் இல்லை என்று உரத்துச் சொல்கின்றனர். போராடவும் செயகின்றனர். இந்நிலையில், 1000 வருடங்களுக்கு முன்னர் லிங்கத்துக்குப் பெருங்கோயில் கட்டியதால் அவர்மீது இன்றைய அடையாளத்தைத் திணிப்பது சரியா? இது வரலாற்றுத் திரிபாகாதா? இதைத்தானே குறிப்பிட்டார் இயக்குநர் வெற்றிமாறன் என்கிறார் விசிக தலைவர் திருமாவளவன்.

இதைத்தானே நாமும் சொல்லி வருகிறோம். இந்து என்பது ஒரு மதமல்ல, வாழ்க்கை முறை என்று. இந்தியா என்கிற இந்துஸ்தானத்தில் இருப்போர் அனைவரும் இந்துக்கள் தான் என்றே நாம் சொல்கிறோம். நீங்கள் சொல்வது போல் சைவமும், வைணவமும் மோதிக்கொண்டாதாகவே இருக்கட்டும். அந்த மோதலை தடுத்து, இணைத்தது இந்து என்ற சொல் தானே? தவறா? ஏன் மோத வேண்டுமா? குருதிச்சேற்றில் தலைகள் உருண்டதாகவே வைத்து கொள்வோம். அதை தடுத்து, சைவத்தையும், வைணவத்தையும் ஒன்றிணைத்தது 'இந்து' என்ற சொல் தானே? ஏன் அடித்து கொண்டு சாக வேண்டும் என்பது தான் உங்கள் விருப்பமா?

மாறிமாறி மதமாற்றம் செய்தது தவறு என்கிறீர்களா? அப்படியானால் தற்போது நடைபெறும் மதமாற்றங்களுக்கு ஆதரவளிப்பது ஏன்? கிறிஸ்துவர்களின் மதமாற்றங்களை கண்டிக்கிறேன் என்று சொல்ல துணிவிருக்கிறதா? ஆங்கிலேயன் எழுதிய மனுதர்ம நூல் என்ற பொய்யான 'மனுஸ்ம்ரிதியை' படித்து இன்றைய இந்துக்களிடம் அன்றைய அடையாளத்தை திணிப்பது ஏன்? இது வரலாற்று மோசடியில்லையா? ஆக, மதமாற்றங்கள் நடைபெற வேண்டும். அதனால் மக்கள் வெளிப்படையாக மோதிக்கொண்டு அடித்து கொள்ள வேண்டும். குருதிச்சேற்றில் தலைகள் உருள வேண்டும்.

அதனால்தான் பல மதங்களை ஒன்றிணைத்திருக்கிற இந்து என்று சொல்லப்படுகிற மதத்தை எதிர்க்கிறீர்கள்? அப்படித்தானே திருமாவளவன் அவர்களே? மீண்டும் சொல்கிறேன். இந்து என்பது ஒரு மதமல்ல. வாழ்க்கை முறை. மண்ணையும், கல்லையும், புல்லையும், மரத்தையும், கண்ணுக்கு தெரியாததையும், மனதிற்கு பிடித்ததையும் வழிபடும் நம்பிக்கையின் அடிப்படையே அழிவில்லாத, நிலையான 'சனாதனதர்மம்' என்ற இன்றைய அமைதியான, உண்மையான தர்மத்தை, நெறியை போதிக்கின்ற இந்து தர்மம் என்கிற கலாசாரம். தேவையில்லாததை படித்து குழம்பி போயுள்ளீர்கள் திருமாவளவன் அவர்களே, தெளிவு பெறுங்கள். வெறுப்பு அரசியலை கை விடுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, விசிக தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், "ராஜராஜ சோழன் காலத்தில் சைவம் வேறு; வைணவம் வேறு. திருநீறு பட்டை வேறு; திருமண் நாமம் வேறு. இரண்டும் வெளிப்படையாக மோதிக்கொண்டன. குருதிச் சேற்றில் தலைகள் உருண்டன. மாறிமாறி மதமாற்றம் செய்து கொண்டன. அக்காலத்தில் ஏது இந்து? இக்காலத்து லிங்காயத்துக்களே தாங்கள் இந்துக்கள் இல்லை என்று உரத்துச் சொல்கின்றனர்.போராடவும் செயகின்றனர். இந்நிலையில், 1000 வருடங்களுக்கு முன்னர் லிங்கத்துக்குப் பெருங்கோயில் கட்டியதால் அவர்மீது இன்றைய அடையாளத்தைத் திணிப்பது சரியா? இது வரலாற்றுத் திரிபாகாதா? இதைத்தானே குறிப்பிட்டார் இயக்குநர் வெற்றிமாறன். அவர் பெரியாரின் பேரன்" என்று பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT   ( 68 Comments )
  • R
    Ravichandran

    மனங்கள் இணைய வேண்டும் ஐயா !!! நான்கு சுவற்றுக்குள் நீங்கள் இருக்கும்போது உங்களோடொத்தவருடன் பேசும்போது மேலாதிக்க மனப்பான்மை இல்லாமல் நீங்கள் உரையாடுகிறீர்களா என்று உங்கள மனசாட்சியை கேளுங்கள் . இம்மண்ணில் பிறந்த மக்கள் பலர் ஏன் இப்படி நடத்தப்பட வேண்டும் என்று நீங்கள் ஆத்மார்த்தமாக வருந்தியது உண்டா? அல்லது எப்படி இந்த அநியாயங்களுக்கு சமத்தாக முட்டு கொடுப்பது என்று யோசிப்பீர்களா .? பெருமாள் நம் எல்லோருக்கும் நல்ல புத்தி கொடுக்கட்டும். கடவுள் தன குழந்தைகளிடம் partiality காட்ட மாட்டார் தானே ?

  • A
    Ananthakrishnan

    இந்தியாவின் வடமேற்கு பகுதியில் (இப்போது பாகிஸ்தான்) சிந்து நதிக்கு அப்பால் வசிப்பவர்களை 'இந்துக்கள்' என்று நீண்ட காலமாக இரானியர்கள் குறிப்பிட்டு வந்தார்கள். பெர்சியன் மொழியில் 'ஸ' உச்சரிப்பு இல்லையென்பதால் இந்துக்கள் என்று குறிப்பிட்டு புழக்கத்தில் இருந்து வந்தது. முகலாய ஆட்சி காலத்தில் இந்துஸ்தான் என்று அழைத்து வந்தார்கள். அவர்களுக்கு முஸ்லிம்களைத் தவிர மற்ற எல்லோரும் காஃபிர்கள் (மதம் இல்லாதவர்கள்) என்பதால் இந்து மதம் என்று அவர்கள் பெயர் வைக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. 18- ஆம் நூற்றாண்டின் கடைசியில் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி காலத்தில் கொல்கத்தா இந்தியாவின் தலைநகரமாக இருந்தபோது வில்லியம் ஜோன்ஸ் என்ற ஒரு ஆங்கிலேய மொழியியலாளர் மற்றும் நீதிபதி வில்லியம் ஜோன்ஸ் என்பவர், பிராமணர்கள் துணை கொண்டு, வசிஷ்டர், பராசர, பிருகு , மனு போன்ற பல மனுதர்ம நூல்களை அடிப்படையாகக் கொண்டு, வேதங்கள், உபநிஷத்துக்கள், புராணங்களை ஒப்பு நோக்கி வட இந்திய கௌட பிராமணர்களின் ஒத்துழைப்புடன் 1794 -ல் இந்து சட்டம் ஆங்கிலத்தில் இயற்றி இங்கிலாந்து மன்னர் உத்தரவுப்படி அதிகாரபூர்வமாக அறிவித்து 'இந்து மதம்' என்ற பெயர் செயலுக்கு வந்தது. அப்போது தென் இந்தியாவில் பெருவாரியாக இருந்த சைவ மதங்களை பற்றியெல்லாம் பற்றி ஆலோசிக்காமல் இவ்வாறு இந்த 1794 இந்து சட்டம் வந்தது. இந்த இந்து சட்டம் பிராமணர்கள் நலனுக்கான சட்டம் என்று தொடர்ச்சியாக ஆட்சேபணைகள் செய்யப்பட்டு வருகிறது. 1800 -க்கு பிறகு தான் இந்து என்ற பெயர் சட்ட பூர்வமான பெயர் பெற்றது. 19-ஆம் நூற்றாண்டில் சுவாமி விவேகானந்தர் திருவனந்தபுரத்தில் இந்து மதம் பற்றி பேசியபோது அங்கு திருவனந்தபுரம் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்த மனோன்மணியம் சுந்தரனார்(நீராடும் கடலுடுத்த - தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் எழுதியவர்) , விவேகானந்தரிடம் நாங்கள் இந்துக்கள் அல்ல வாதிட்டார். தாங்கள் தென்னிந்திய சைவ மதம் என்றும் இந்து என்று குறிப்பிடுவதற்கு ஆட்சேபனை செய்தார். தென்னிந்திய சைவ சித்தாந்தம் மிகவும் புராதனமானது என்று விவேகானந்தருக்கு அப்போதுதான் தெரியவந்தது. அதன் பிறகுதான் சுவாமி விவேகானந்தர் இந்து மதம் என்று பிறரால் சூட்டப்பட்ட பெயர் தவறு என்றும், வரையறை செய்ய முடியாத இந்த மதத்துக்கு 'சனாதன மதம்' என்று பெயர் சூட்ட வேண்டும் என்று அவருடைய உரைகளில் பேசியிருக்கிறார். இன்று வரை சொல்லப்படும் இந்நாட்டு வேத மந்திரங்கள் எதிலும் இந்து என்ற வார்த்தை பயன்பாட்டில் இல்லை. எந்த வேதத்திலும், ராமாயணம், மகாபாரதம், 18 புராணங்களிலும், பிராமணர்கள் தினசரி சொல்லும் எந்த ஸ்லோகங்களில் இந்து என்ற வார்த்தை அறவே இல்லை. எனவே வட இந்தியாவில் உள்ள கௌட பிராமணர்கள் சொல்படி எழுதப்பட்டதுதான் இந்த இந்து சட்டம் 1794. சைவ சமயத்தை முழுவதும் புறக்கணித்து எழுதப்பட்டதுதான் இந்து சட்டம். எனவே, சைவ மரபினரான 10 - ஆம் நூற்றாண்டு ராஜராஜ சோழ மன்னரை இந்து என்று சொல்வது எந்த விதத்தில் சரியானது என்பதை அறிவாளிகள் தான் விளக்க வேண்டும்.

      I
      Ilango

      புத்த ஸ்மிரிதி ,ப்ருஹஸ்பத்ய ஆகமம்,பவிஷ்ய புராணம் ஆகிய நூல்களைப்பற்றி இதுவரை கேள்விப்பட்டதே இல்லையே?இந்த நூல்கள் எல்லாம் யாரால்,எப்போது,எந்த மொழியில் எழுதப்பட்டது என்ற விளக்கங்களை நண்பர் சிவன் தருவாரா?Really I am asking out of academic interest.

      0

      0

      s
      sivan

      கத்தோலிக்கர்கள் , ப்ரோட்டஸ்டண்ட்ஸ்கள் , பெந்தேகோஸ்தெ, செவென்த் டே அட்வென்டிஸ்ட்கள் போன்றோரை பொதுவாக கிறிஸ்தவர்கள்ப்ருஹஸ்பதியை என்றுதானே குறிப்பிடுகிறோம்? . சோழ நாட்டில் பிறந்தவர் என்றா சொல்கிறோம்? வேலையில்லா சில கிறுக்கர்கள் இந்த வெட்டிவேலையை ஆரம்பித்து வைத்திருக்கிறார்கள் . நிற்க ஹிந்து என்ற சொல் 2400 ஆண்டுகளுக்கு முற்பட்ட புத்தஸ்ம்ருதி , ப்ருஹஸ்பத்ய ஆகமம் பவிஷ்ய புராணம் போன்ற நூல்களில் உள்ளன . பெர்சியா , சீனா வளைகுடா நாடுகள் சிந்து நதிக்கு இப்புறம் உள்ளவர்களும் ஹிந்து என்றே குறிப்பிடப்பட்டுள்ளார்கள் . இன்றும் அப்படித்தான் குறிப்பிடுகிறார்கள் . ஆக மொத்தம் பொன்னியின் செல்வனுக்கு இலவச விளம்பரம் ,

      0

      2

      I
      Ilango

      உங்களுடைய தெளிவான விளக்கத்துக்கு மிக்க நன்றி நண்பரே!இந்தத்தளத்தில் உள்ள அனைவரும் படித்து தெளிவு பெறவேண்டுகிறேன்.

      2

      0

 
x
News Hub
Icon