Published : 04 Oct 2022 07:29 PM
Last Updated : 04 Oct 2022 07:29 PM
சென்னை: கொள்ளிடம் ஆற்றில் நீரில் முழ்கி பலியான 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், " தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டிமாதா கோவில் அருகில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்ற தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சார்லஸ் (38), பிரித்திவிராஜ் (36 ), தாவீது (30), ஈசாக் (19), பிரவீன்ராஜ் (19), கெர்மஸ் (18) ஆகிய ஆறு பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை தருகிறது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். இந்த திமுக அரசு மணல்போக்கி குறித்து எந்த ஒரு எச்சரிக்கை பலகையும் வைக்காததை கண்டிப்பதுடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்க இந்த அரசை வலியுறுத்துகிறேன்" இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டிமாதா கோவில் அருகில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்ற தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சார்லஸ் (38)பிரித்திவிராஜ் (36 )தாவீது (30) ஈசாக் (19) பிரவீன்ராஜ் (19) கெர்மஸ் (18) ஆகிய ஆறு பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம்1/2
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) October 4, 2022
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT