Published : 04 Oct 2022 06:34 AM
Last Updated : 04 Oct 2022 06:34 AM
சென்னை: அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் உள்ளிட்டோருக்கு பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) செயலர் ரஜ்னிஷ் ஜெயின் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:தேசிய திறன் தகுதிக்கான கட்டமைப்பின் கீழ் திறன் சார்ந்த கல்வி வழங்கும் நிறுவனங்களுக்கான வழிகாட்டுதல்கள் யுஜிசி இணையதளத்தில் உள்ளன. அதன்படி, மதிப்பெண் வகைப்பாட்டுடன் தொழில் சார்ந்த கல்வி வழங்கும் உயர்கல்வி நிறுவனங்கள், மேற்கூறிய கட்டமைப்புடன் ஒருங்கிணைந்து, அதில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வி, திறன் சார்ந்த விஷயங்களை மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
எனவே, அனைத்து உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் அதை சார்ந்த கல்லூரிகள் உள்ளிட்டவை தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் கலந்துரையாட வேண்டும். இதன் மூலம் தொழில் துறை சார்ந்த வளர்ச்சியை அடையும் வகையில் பாடத்திட்டத்தை நெறிப்படுத்த முடியும். அதை திறம்பட முடிக்கும் மாணவர்களுக்கு மதிப்பெண் வகைப்பாட்டை வழங்க வேண்டும். இவ்வாறு செய்வது, படித்து முடித்துச் செல்லும் மாணவர்கள் வேலைவாய்ப்பு பெறும் சதவீதத்தை படிப்படியாக அதிகரிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT