Published : 04 Oct 2022 06:24 AM
Last Updated : 04 Oct 2022 06:24 AM
சென்னை: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் சார்பில், குறைதீர்ப்புக் கூட்டம், வரும் 10-ம் தேதி நடைபெறுகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் சார்பில், ‘வருங்கால வைப்பு நிதி உங்கள் அருகில்’ என்ற பெயரில் குறைதீர்ப்புக் கூட்டம் வரும் 10-ம் தேதி நடைபெறுகிறது. எனவே, சென்னை வடக்கு மண்டல அலுவலகத்தில் கணக்கு வைத்துள்ள ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள், நிறுவன உரிமையாளர்கள், சந்தாதாரர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று தங்களது குறைகளுக்கு நிவாரணம் பெறலாம் என சென்னை வடக்கு மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர்-1, சி.அமுதா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment