Published : 03 Oct 2022 02:42 PM
Last Updated : 03 Oct 2022 02:42 PM

தேர்தல் வாக்குறுதிப்படி பணி வழங்க கோரி TET தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் 

TET தேர்வில் தேர்ச்சிப்பெற்றவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

சென்னை: 2021 தேர்தலில், திமுக வாக்குறுதி அளித்தபடி, ஆசிரியர் தகுதி தேர்வில் (TET) ஏற்கெனவே தேர்ச்சிப் பெற்ற தங்களுக்கு பணி வழங்க கோரி, 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று (அக்.3) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆசிரியர் தகுதி தேர்வில் (TET) தேர்ச்சிப் பெற்ற ஆசிரியர்களுக்கு மீண்டும் ஒரு மறு நியமனம் போட்டி தேர்வு என்ற அரசாணை 149-ஐ ரத்து செய்ய வேண்டும். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரியும் 2013, 2014, 2017 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு ஆசிரியர் பணி வழங்க வேண்டும். இந்த பணி நியமனங்களை மேற்கொள்ளும்போது தற்போதுள்ள வயது வரம்பை தளர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் முன்வைக்கப்பட்டன.

மேலும், கடந்த அதிமுக ஆட்சியில் பலமுறை இக்கோரிக்கைகளை முன்வைத்தும் அரசு செவிசாய்க்கவில்லை என்றும், கடந்த 2018-ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு மீண்டும் ஒரு நியமன போட்டி தேர்வு என்ற 149-ஐ அரசாணையை வெளியிட்டதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

திமுக ஆட்சிக்கு வந்தால் அரசாணை எண் 149-ஐ ரத்து செய்து ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின்போது, திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தது. அந்த வாக்குறுதியின்படி பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலக்கூட்டமைப்பு சார்பில் நடந்த இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். கோரிக்கைகள் அடங்கிய வாசகங்களை கழுத்தில் கட்டித் தொங்கவிட்டப்படி ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x