Published : 03 Oct 2022 06:36 AM
Last Updated : 03 Oct 2022 06:36 AM
கொடைக்கானல்: கொடைக்கானலில் மலரும் குறிஞ்சி பூக்கள் கடல் மட்டத்தில் இருந்து 1,200 முதல் 2,500 மீட்டர் உயரத்தில் மட்டுமே வளரும்.
இதில் நீலக்குறிஞ்சி, கருங்குறிஞ்சி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறையும், சிறு குறிஞ்சி 7 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் பூக்கும்.
கொடைக்கானலில் மன்னவனூர், பூம்பாறை உள்ளிட்ட மேல்மலை கிராமங்களின் மலைத் தொடர்களில் கடந்த 2015-க்கு பிறகுவெள்ளை, ஊதா நிறங்களில் சிறு குறிஞ்சி மலர்கள் தற்போது பூத்துக் குலுங்குகின்றன. இதை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் ரசித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT