Published : 05 Jul 2014 10:39 AM
Last Updated : 05 Jul 2014 10:39 AM
ராயப்பேட்டை மருத்துவமனை பிணவறையில் இருந்த ஒருவரின் சடலத்தை ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வினோத் என்பவர் தனது தந்தை என்றும், விஜயநகரத்தைச் சேர்ந்த செம்மசரன் என்பவர் தனது அண்ணன் என்றும் கூறி உரிமை கொண்டாடினர். பின்னர் இரு தரப்பினரும் வாய்த் தகராறில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் இரு தரப்பினரையும் சமாதானப் படுத்தினர். பின்னர், மருத்துவக் குழுவினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வினோத்தை அழைத்து அவர் தந்தையின் உடல் எடை, உயரம், அணிந்திருந்த ஆடைகள், உடலில் இருக்கும் அடையாளங்கள், பல் வரிசை ஆகியவை குறித்து விசாரித்தனர். இதேபோல், செம்மசரனிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
இறுதியில் அந்த உடல் செம்மசரனின் அண்ணன் கவுரிநாயுடு என தெரியவந்தது. இதையடுத்து, செம்மசரனிடம் அந்த உடல் ஒப்படைக்கப்பட்டது.
ராயப்பேட்டை, பிணவறையில் அடையாளம் தெரியாத நிலையில், ஒருவரின் உடலைப் பெற்றுக்கொள்வதில் இரண்டு குடும்பங்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT