Published : 04 Nov 2016 09:20 AM
Last Updated : 04 Nov 2016 09:20 AM

தொடரும் கல்விக் கடன் சர்ச்சைகள்: தற்கொலை செய்த மாணவரின் பெற்றோருக்கும் நெருக்கடி

மதுரையில் கல்விக் கடன் நெருக் கடியால் கட்டிடத் தொழிலாளியின் மகன் லெனின் தற்கொலை செய்துகொண்ட நிலையில், கடனை திரும்பக் கேட்டு லெனின் பெற்றோருக்கு மீண்டும் நெருக்கு தல் கொடுப்பதாகக் கூறப்படும் விவகாரம் சர்ச்சையாகி உள்ளது.

பொறியியல் படிப்புக்காக மதுரை சிட்டி எஸ்பிஐ வங்கி யில் கட்டிடத் தொழிலாளி கதிரேசன் ரூ.1.90 லட்சம் கடன் பெற்றி ருந்தார். இது தொடர்பாக எஸ்பிஐ வங்கிக்காக கல்விக் கடனை வசூலிக்கும் பொறுப்பை ஏற்றுள்ள ‘ரிலையன்ஸ் ரெக்கவரி’ நிறுவனத் தில் இருந்து தொடர் அழுத்தம் கொடுக்கப்பட்டதால் கடந்த ஜூலை மாதம் கதிரேசனின் மகன் லெனின் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து, கடன் வசூலிப்பு நடவடிக்கைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்த ரிலையன்ஸ், தற்போது கடனை வசூலிக்க கதிரேசனுக்கு மீண்டும் நெருக்கடி தர தொடங்கியுள்ளது.

இதுபற்றி நம்மிடம் பேசிய கதிரேசன், “கடன் சம்பந்தமாக வங்கியில் இருந்து யாரும் பேச வில்லை. ரிலையன்ஸ்காரர்கள் தான் தொலைபேசி மூலம், ‘உடனடி யா கடனைக் கட்டுற வேலையப் பாருங்க; இல்லாட்டி நடவடிக்கை வேறமாதிரி இருக்கும்’னு மிரட்டல் தொனியில் பேசினர். நெருக்கடி மேல நெருக்கடி கொடுத்து எங்கள் மகனைச் சாகடிச்சவங்க, மறுபடி எங்களையும் தொல்லை பண்ண ஆரம்பிச்சிருக்காங்க’’ என்றார்.

இதேபோல், மதுரையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் பாலமுரு கனும் மதுரை அம்பேத்கர் சாலை எஸ்பிஐ வங்கியில் மகன் ராகேஷுக் காக 2012-ல் கல்விக் கடன் பெற்றுள்ளார். கடந்த ஜூன் மாதம் ஐந்தாம் ஆண்டு படிப்புக்கான தவணையை கேட்டுச் சென்றபோது, ‘உங்களது பெயர் வாராக்கடன் பட்டியலில் உள்ளது. உடனடியாக ரிலையன்ஸிடம் கடனைத் திருப்பிச் செலுத்துங்கள்’ என்று சொல்லி உள்ளனர்.

மாற்றுத்திறனாளி மாணவர்

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பொறியியல் படிப்பு என்ப தால் ராகேஷின் படிப்புக் காலம் 6 ஆண்டுகள். இது தெரியாமல், 4 ஆண்டுகள் முடிந்ததுமே அவ ரது பெயரை வாராக் கடன் பட்டி யலில் சேர்த்துள்ளனர். இந்த விவகாரத்தை மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்குக் கொண்டுபோனதும் சமரசம் பேசிய வங்கி நிர்வாகம், 5-ம் ஆண்டு படிப்புக்கான தவ ணைத் தொகையை வழங்கி உள் ளது.

இப்போது பாலமுருகனையும் கடனைத் திருப்பிக் கட்டச் சொல்லி ரிலையன்ஸ் தரப்பில் இருந்து நெருக்குதல் தரத் தொடங்கி யுள்ளனர்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய பாலமுருகன், “தவறுதலா எங்க பெயரை வாராக் கடன் பட்டியலில் சேர்த்துட்டாங்கன்னு சொன்னதுக்கு, ‘தேவையில்லாத விஷயங்களைப் பேசாம பணத்த கட்டுற வேலைய மட்டும் பாருங்க’ன்னு ரிலையன்ஸ்ல சொல்றாங்க. வங்கி மேலாளர்கிட்ட சொன்னபிறகு கொஞ்ச நாள் அமைதியா இருந்தாங்க. இப்ப மறுபடியும் தொல்லை பண்ண ஆரம்பிச்சுட்டாங்க’’ என்றார்.

சட்டப்படி நடவடிக்கை

கதிரேசன் கொடுத்த எண்ணில் சென்னையில் உள்ள ரிலையன்ஸ் ரெக்கவரி பிரிவின் நந்தகுமாரிடம் பேசியபோது, “லெனினின் கல்விக் கடனை வசூலிப்பது தொடர்பாக சட்டப்படியான நடவடிக்கைகள் போய்க்கொண்டு இருப்பதால் நாங்கள் எதுவும் அவர்களிடம் பேசவில்லை’’ என்றார்.

பாலமுருகனிடம் பேசிய சேலம் ‘ரிலையன்ஸ் ரெக்கவரி’ பிரிவின் சாந்தினியிடம் கேட்டபோது, “பால முருகனிடம் கடனை கட்டச் சொன் னது உண்மைதான். ஆனால், அவரது பெயர் வாராக் கடன் பட்டியலில் தவறுதலாக சேர்க்கப் பட்டுவிட்டது என்று வங்கி மேலாளர் சொன்ன பிறகு அவருக்கு நாங்கள் எந்தத் தொந்தரவும் கொடுக்க வில்லை’’ என்றார்.

வழக்கு தொடர முடிவு

இவ்விரண்டு விவகாரங்கள் தொடர்பாகவும் பேசிய கல்விக் கடன் விழிப்புணர்வு இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளார் மா.ராஜ்குமார், “லெனின் இறப்புக்கு எஸ்பிஐ-யும் ரிலையன்ஸும்தான் பொறுப்பேற்க வேண்டும். ராகேஷ் விவகாரத்திலும் பொறுப்பற்ற தன்மையுடன் நடந்திருக்கிறது எஸ்பிஐ. இதற்கெல்லாம் கதிரேச னுக்கும், பாலமுருகனுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண் டும் என்று எஸ்பிஐ-க்கு தனித் தனியாக கடிதம் எழுதி இருக்கிறோம்.

மேலும், வங்கியும் ரிலையன்ஸ் தரப்பும் கொடுத்த நெருக்கடியால்தான் லெனின் தற்கொலை செய்துகொண்டதாக எஃப்ஐஆர் போட்டிருக்கிறது போலீஸ். அது தொடர்பாக இரண்டு தரப்பு மீதும் உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக் கோரியும் வங்கி நிர்வாகம் உரிய இழப்பீடு வழங்கக் கோரியும் அடுத்த வாரத்தில் வழக்கு தாக்கல் செய்ய உள்ளோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x