Published : 11 Nov 2016 08:35 AM
Last Updated : 11 Nov 2016 08:35 AM
நாடு முழுவதும் இரு நாட் களுக்கு பிறகு இன்று ஏடிஎம் மையங்கள் திறக்கப்பட உள்ள நிலையில், நிர்ணயிக்கப்பட்ட எண் ணிக்கையை விட அதிகமாக ஏடிஎம் கார்டை பயன்படுத்துவதற்கான சேவை கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
ரூ. 20 கட்டணம் பிடித்தம்
பெரும்பாலான வங்கிகளில் டெபிட் கார்டை, அந்தந்த வங்கி களின் ஏடிஎம்-களில் மாதத்துக்கு 5 முறையும், பிற வங்கி ஏடிஎம்களில் 3 முறையும் இலவசமாக பயன் படுத்திக்கொள்ளலாம். அதற்கு மேல் பயன்படுத்தினால், ஒவ் வொரு முறையும் ரூ.20 கட்டணமாக, வங்கிக் கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்படும். தற்போது பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து பெரும்பாலானோர், ரூ.100 நோட்டுகளை எடுப்பதற்காக ஏடிஎம்களுக்குச் சென்று, ரூ.400 வீதம் பலமுறை எடுத்தனர். ஏடிஎம்-களில் ரூ.100 நோட்டுகள் தீரும் நிலை ஏற்பட்டபோது, ரூ.200 வீதம் எடுக்க வேண்டியிருந்தது. இதனால் இந்த மாதத்துக்கான இலவச பயன்பாட்டை பலர் நிறைவு செய்துவிட்டனர்.
நேற்று முதல் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் வங்கிகளில் செலுத்தி வருகின்றனர். அங்கு 100-க்கும் மேற்பட்டோர் காலை 8.30 மணியிலிருந்தே வரிசையில் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு குடிநீர், கழிப்பறை என எந்த வசதியையும் வங்கி நிர்வாகங்கள் செய்து தரவில்லை. வெயிலில் கால் கடுக்க நிற்க வேண்டும். அதனால், வங்கிகளுக்கு நேரடியாக சென்று அதிகபட்சமாக ரூ.4 ஆயிரம் வரை பணமாக பெறுவதும் பெரும் சிரமம். எனவே பணத்தை எடுக்க ஏடிஎம் மட்டுமே சுலபமான வழி.
ஆனால் ஏற்கெனவே இலவச பயன்பாட்டை நிறைவு செய்து விட்டதால், இனிமேல் பயன் படுத்தினால், ஒவ்வொரு பயன் பாட்டுக்கும் ரூ.20 கட்டணம் வசூ லிக்கப்பட இருப்பது, பொது மக்களை வேதனைக்குள் ளாக்கியுள்ளது. ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட சில வங்கிகள் ஏடிஎம் பயன்பாட்டுக்கு டிசம்பர் 30 வரை எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது என்று அறிவித் துள்ளன.
இது தொடர்பாக கொடுங்கை யூரைச் சேர்ந்த அனிதா கூறும் போது, “நான் ஐடி நிறுவனத்தில் பணிபுரிகிறேன். எனது மாத சம் பளத்தை ஏற்கெனவே இரு முறை ஏடிஎம்-மில் எடுத்துவிட்டேன். கடந்த 8-ம் தேதி இரவு ரூ.100 நோட்டுகள் தேவை என்பதால் பலமுறை பயன்படுத்திவிட்டேன். இப்போது ரூ.30 ஆயிரத்தை வங்கியில் செலுத்தியிருக்கிறேன். மணிக்கணக்கில் என்னால் வரிசை யில் நிற்க முடியாது. இன்று ஏடிஎம்-கள் திறக்க இருக்கிறது. அதில் வரும் 18-ம் தேதி வரை தினமும் ரூ.2 ஆயிரம்தான் எடுக்க முடியும். அதற்கு பலமுறை ஏடிஎம் கார்டை பயன்படுத்த வேண்டியிருக்கும். அதற்காக ஒவ்வொரு நாளும் ரூ.20 கட்டண மாக பிடிப்பதை ஏற்க முடி யாது. வரும் டிசம்பர் மாதம் வரை, எத்தனை முறை பயன் படுத்தினாலும் கட்டணம் வசூலிக்கக் கூடாது” என்றார்.
இது தொடர்பாக சென்னை மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அருண்குமாரிடம் கேட்ட போது, “மக்கள் பிரச்சினையை அறிந்து மத்திய அரசு, சுங்கக் கட்டணத்தை வரும் 11-ம் தேதி வரை ரத்து செய்துள்ளது. இன்று ஏடிஎம்கள் திறக்கப்படுகின்றன. இதில் மக்கள் சந்திக்கும் பிரச்சினை களை அறிந்து, அதற்கான தீர்வுகளை மத்திய அரசு அறி விக்கும். ஏடிஎம்-மை பலமுறை பயன்படுத்துவதற்கான கட்ட ணத்தை தற்காலிகமாக ரத்து செய்வது தொடர்பாக இதுவரை எந்த உத்தரவும் எங்களுக்கு வரவில்லை” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT