Published : 30 Sep 2022 03:32 PM
Last Updated : 30 Sep 2022 03:32 PM

சென்னையில் தெரு நாய்களை கட்டுப்படுத்துவது மாநகராட்சிக்கு சவாலாக உள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அமைச்சர் மா.சுப்பிரமணியன் | கோப்புப் படம்

சென்னை: சென்னையில் தெரு நாய்களை கட்டுப்படுத்துவது மாநகராட்சிக்கு சவாலான ஒன்றாக உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "அண்மையில் ஊட்டச்சத்தை உறுதி செய்யும் வகையிலான திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இதில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளை கண்டறிந்து ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. 1.11 லட்சம் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர். 1.11 லட்சம் குழந்தைகளில் 43 ஆயிரம் பேருக்கு இதய கோளாறு, சிறுநீர் கழிக்கும் இடத்தில் பிரச்சினை என ஏதேனும் குறை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்களை சரி செய்யும் பணிகளை அரசு முன்னேடுத்துள்ளது.

அதிகளவு சுகப்பிரசவம் நடக்கும் மாநிலம் தமிழ்நாடு. கர்ப்பிணி பெண்களுக்கு என மருத்துவமனையில் பல்வேறு வசதிகள் அரசு சார்பில் செய்யப்பட்டுள்ளது. குறைபாடு இல்லா குழந்தை தமிழகத்தில் பிறக்க வேண்டும். இறப்பில்லா மகப்பேறு இருக்க வேண்டும்.

தெரு நாய்களை கட்டுப்படுத்துவது மாநகராட்சிக்கு சவாலான ஒன்று. 20, 30 வருடங்களுக்கு முன்பு பிடிக்கப்படும் நாய்கள் கொல்லப்பட்டன. ஆனால் தற்போது பிடிக்கப்படும் நாய்கள் கருத்தடை செய்யப்பட்டு மீண்டும் அதே இடத்தில் விடப்படுகிறது. ரேபிஸ் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்படுள்ளது. எச்1என்1க்கு தினம் தோறும் 1000 இடங்களில் தடுப்பூசிபோடும் பணிகள் நடைபெற்று வருகிறது. 374 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்" இவ்வாறு அமைச்சர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x