Published : 30 Sep 2022 04:35 AM
Last Updated : 30 Sep 2022 04:35 AM

திமுக திருவாரூர், நாகை தெற்கு, வடக்கு மாவட்டச் செயலாளர்கள் தேர்வு

திருவாரூர்/ நாகப்பட்டினம்/ மயிலாடுதுறை

திமுக திருவாரூர், நாகை தெற்கு, வடக்கு மாவட்டச் செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டச் செயலாளராக 3-வது முறையாக பூண்டி கே.கலைவாணன் எம்எல்ஏ போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேலும், அவைத் தலைவராக க.தன்ராஜ், துணைச் செயலாளர்களாக எம்.எஸ்.கார்த்திக், மு.ராமகிருஷ்ணன், பி.சாந்தி, பொருளாளராக மு.வெங்கடேசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் 5 தலைமை செயற்குழு உறுப்பினர்கள், 10 மாவட்டப் பொதுக் குழு உறுப்பினர்கள், 18 ஒன்றியச் செயலாளர்கள், 4 நகரச் செயலாளர்கள், 7 பேரூராட்சி செயலாளர்கள் ஆகியோரது பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகை தெற்கு: திமுக நாகை தெற்கு மாவட்டச் செயலாளராக என்.கவுதமன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், அவைத் தலைவராக பா.செல்வம், துணைச் செயலாளர்களாக சோ.ரவிச்சந்திரன், ஆரூர் மணிவண்ணன், கற்பகம், பொருளாளராக மு.லோகநாதன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் தவிர, 4 தலைமை செயற்குழு உறுப்பினர்கள், 9 பொதுக் குழு உறுப்பினர்கள், 12 ஒன்றியச் செயலாளர்கள், 3 நகரச் செயலாளர்கள், 4 பேரூராட்சிச் செயலாளர்கள் ஆகியோரும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

நாகை வடக்கு: திமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ள நிவேதா எம்.முருகன், கடந்த 6 ஆண்டுகளாக நாகை வடக்கு மாவட்டப் பொறுப்பாளராக இருந்து வந்தார். 2020-ம் ஆண்டு மயிலாடுதுறை தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டுவிட்டாலும், திமுக நிர்வாக அமைப்பில் நாகை வடக்கு மாவட்டம் என்று குறிப்பிட்டே பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.

இதன்படி, திமுக நாகை வடக்கு மாவட்டச் செயலாளராக பூம்புகார் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் நிவேதா எம்.முருகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பிற நிர்வாகிகள் விவரம்: அவைத் தலைவர் கே.ஜி.சீனிவாசன். துணைச் செயலாளர்(பொது) மு.ஞானவேலன், துணைச் செயலாளர்(ஆதி திராவிடர்) சி.செல்வமணி, துணைச் செயலாளர்(மகளிர்) ப.கண்ணகி, பொருளாளர் மகா.அலெக்சாண்டர், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மு.பன்னீர்செல்வம், முத்து.மகேந்திரன், ஜி.என்.ரவி, இராம.இளங்கோவன்.

பொதுக் குழு உறுப்பினர்கள்: ஜெ.கபிலன், எஸ்.சங்கரநாராயணன், பி.கென்னடி, அ.காந்தி, ஹர்ஷத், சி.சுவாமிநாதன், வின்சென்ட், எஸ்.வெற்றிவேல், சிவதாஸ், சுபா நெடுஞ்செழியன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x