Published : 28 Sep 2022 07:35 AM
Last Updated : 28 Sep 2022 07:35 AM
சென்னை: தமிழகம் பிஎஃப்ஐ-யின் கோட்டையாக மாறிவருகிறது. என்று மத்தியஇணை அமைச்சர் அஸ்வினி குமார் சவ்பே குற்றம்சாட்டியுள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் அஸ்வினிகுமார் சவ்பே நேற்று கூறியதாவது: பாப்புலர் ஃப்ரன்ட் ஆப் இந்தியா (பிஎஃப்ஐ) போன்ற அமைப்புகள் வேரூன்ற ஒருசிலஅரசியல் கட்சிகளின் கொள்கையே காரணமாகும். தமிழகம் பிஎஃப்ஐ-யின் கோட்டையாக மாறிவருகிறது. அவர்களின் கனவு ஒருபோதும் நிறைவேறாது. சதித் திட்டங்கள் தகர்த்தெறியப்படும்.
பிரதமர் மோடியின் ஆட்சியில் தீவிரவாதத்துக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. பாஜகவினர், ஆர்எஸ்எஸ்காரர்கள் மீதான தாக்குதல்களை பொறுத்துக்கொள்ள முடியாது. பாஜக தொண்டர்கள் யாருக்கும் அச்சப்பட வேண்டாம்.
தமிழக அரசு மீது புகார்: தமிழக மக்கள் அமைதியை விரும்புபவர்கள். ஆனால், இங்குஆட்சியில் இருப்போரின் செயல்பாடு வன்முறையையும், தீவிரவாதத்தையும் ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. பாஜக ஜனநாயக வழிகளில் மக்களின் குரலை உயர்த்தி வருகிறது. தமிழக அரசு அதை ஒடுக்கமுயல்கிறது. அது நல்லதல்ல.மத்திய அரசும் மானியம் வழங்குவதால் முறைப்படி ரேசன் கடைகளில் பிரதமரின் படத்தை வைக்க வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT