Published : 26 Sep 2022 05:11 PM
Last Updated : 26 Sep 2022 05:11 PM
திருப்பூர்: அவிநாசி அருகே பழங்கரையில் காவலர்கள் வந்த வாகனம் இன்று காலை விபத்துக்குள்ளானதில் 20-க்கும் மேற்பட்ட போலீஸார் படுகாயமடைந்தனர்.
கோவையில் பெட்ரோல் குண்டுவீச்சு உள்ளிட்ட சம்பவங்கள் அரங்கேறியதை தொடர்ந்து, கோவையில் கூடுதல் பாதுகாப்புப் பணிக்கு செல்வதற்காக, கடலூரில் இருந்து கோவை நோக்கி 30-க்கும் மேற்பட்ட ஆயுதப்படை காவலர்கள் பயணிகள் வேனில் வந்து கொண்டிருந்தனர். அவிநாசி பழங்கரை ரங்காநகர் அருகே வந்தபோது, முன்னால் சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி திடீரென நிறுத்தப்பட்டதால், பின்னால் வந்து கொண்டிருந்த காவலர் வாகனம் கன்டெய்னர் லாரியின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காவலர் வாகனம் ஓட்டி வந்த முருகன் உள்பட்ட 20-க்கும் மேற்பட்ட காவலர்கள் காயமடைந்தனர்.
காயமடைந்த காவலர்கள் உடனடியாக அவிநாசி, திருப்பூர் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து அவிநாசி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். மேலும், தப்பியோடிய கன்டெய்னர் லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT