Published : 26 Sep 2022 07:10 AM
Last Updated : 26 Sep 2022 07:10 AM

போலி தகவல்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம்: வருமானவரித் துறை எச்சரிக்கை

சென்னை: வரி செலுத்துமாறு வரும் போலி தகவல்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என வருமான வரித் துறை எச்சரித்துள்ளது.

வருமானவரித் துறை அலுவலகம்போல் நோட்டீஸ் அனுப்பி மர்ம நபர்கள் சிலர் முறைகேடுகளில் ஈடுபடுவதாக தெரிய வந்துள்ளது.

குறிப்பாக, இ-மெயில், கடிதம் மற்றும் தொலைபேசி அழைப்புகள் மூலம் பொதுமக்களை தொடர்புகொண்டு அவர்களது சேமிப்புக் கணக்கில் இருந்து வரி செலுத்துமாறு கூறி சிலர் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நம்பகத்தன்மை

பொதுமக்களும் இதை நம்பி தங்களது பணத்தை இழந்து வருகின்றனர். எனவே, இதுபோன்ற தகவல்கள் ஏதேனும் வந்தால் அவற்றின் நம்பகத்தன்மை குறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமானவரித் துறையின் அதிகாரப்பூர்வமான www.tnincometax.gov.in என்ற இணையதளத்தில் சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

மேலும், வருமானவரித் துறை அனுப்பும் அனைத்து அலுவலக கடிதங்களிலும் ‘டின்’ என்ற ஆவணக் குறியீட்டு எண் குறிப்பிடப்பட்டிருக்கும்.

மேலும், வரித்தொகையை செலுத்த வருமானவரித் துறை எந்தவித லிங்க்கையும் அனுப்புவது கிடையாது. வரித் தொகை ஆன்லைன் அல்லது வங்கி மூலமாக முறையாக வசூலிக்கப்படுகிறது.

எனவே, இதுபோன்ற தகவல்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என வருமானவரித் துறை கூடுதல் ஆணையர் வி.வித்யாதர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x