Published : 26 Sep 2022 06:15 AM
Last Updated : 26 Sep 2022 06:15 AM

வன்முறை சம்பவங்களால் ஏற்பட்ட பாதிப்பை ஆய்வு செய்ய சட்டப்பேரவை உறுப்பினர்கள் தலைமையில் குழுக்கள் அமைப்பு: அண்ணாமலை அறிவிப்பு

சென்னை: வன்முறை சம்பவங்களால் ஏற்பட்ட பாதிப்பை ஆய்வு செய்ய சட்டப்பேரவை உறுப்பினர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அவர்நேற்று வெளியிட்ட அறிக்கையில்கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் இந்து அமைப்புகளில் உள்ள தலைவர்கள், தொண்டர்களின் அலுவலகங்கள், வீடுகள் ஆகியவற்றில் கடந்த நான்கு நாட்களாக பெட்ரோல் குண்டுகள் வீசுதல், தீ வைத்தல் போன்ற வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த வன்முறை சம்பவங்களால் ஏற்பட்ட பாதிப்பை அந்தந்த பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து மாநில தலைமையிடம் அறிக்கை சமர்ப்பிக்க தமிழக பாஜக சார்பில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தலைமையில் குழு அமைக்கப்படுகிறது.

கன்னியாகுமரி மற்றும் மதுரை பெருங்கோட்டத்துக்கு சட்டப்பேரவை உறுப்பினர் எம்.ஆர்.காந்தி தலைமையில் மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா, மாநில பொதுச் செயலாளர் பொன்.பாலகணபதி, கூட்டுறவு பிரிவின் மாநிலத் தலைவர் கே.மாணிக்கம் ஆகியோரும், திருச்சி, விழுப்புரம் மற்றும் சென்னை பெருங்கோட்டத்துக்கு சட்டப்பேரவை குழு தலைவர்நயினார் நாகேந்திரன் தலைமையில்மாநில செயலாளர்கள் ஏ.ஜி.சம்பத்,மீனாட்சி, எஸ்சி அணியின் மாநிலத்தலைவர் தடா பெரியசாமி ஆகியோரும், வேலூர் மற்றும் சேலம் பெருங்கோட்டத்துக்கு சட்டப்பேரவை உறுப்பினர் சி.கே.சரஸ்வதி தலைமையில் மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி, மாநில செய்தித் தொடர்பாளர் நரசிம்மன், சிறுபான்மையினர் அணி மாநிலத்தலைவர் டெய்சி சரண் ஆகியோரும் கோவை பெருங்கோட்டத்துக்கு சட்டப்பேரவை உறுப்பினர்வானதி சீனிவாசன் தலைமையில் மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம், மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், விவசாய அணி மாநிலத் தலைவர் ஜி.கே.நாகராஜ் ஆகியோரும் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x