Published : 26 Sep 2022 06:14 AM
Last Updated : 26 Sep 2022 06:14 AM
நாமக்கல்: நாளிதழ்களை கணினி மயமாக்கும் பணியில் சிறந்த விளங்கும் நபருக்கு திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். கல்வி நிறுவனத்தில் நடைபெறும் தேசிய அளவிலான கருத்தரங்கில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது. நடப்பாண்டுக்கான விருதுக்கு ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் நூலகத்தில் தலைமை நூலகராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற நூலகர் ஏ.சங்கரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் சென்னை அலுவலக நூலகத்தில் தலைமை நூலகராக ஏ.சங்கரன் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 1881-ம் ஆண்டு முதல் 2002-ம்ஆண்டு வரை வெளிவந்த 20லட்சம் ஆங்கில நாளிதழ் பிரதிகளை கணினி மயமாக்கும் (டிஜிட்டல்) பணியில் ஈடுபட்டார்.
தொடர்ந்து, ‘தி இந்து’ ஆங்கிலநாளிதழ் நூலகப் பிரிவில் கடந்த32 ஆண்டுகளாக சிறப்பாக பணிபுரிந்து கடந்த ஏப்ரல் மாதம் பணி ஓய்வு பெற்றார். இந்திய அளவில் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் முற்றிலும் முதல்முறையாக டிஜிட்டல்மயமாக்கப்பட்டது. அதன்பின்னரே பிற நாளிதழ்கள் இப்பணியை மேற்கொண்டன. இப்பணியை சிறப்பாக மேற்கொண்ட நூலகர் ஏ.சங்கரனுக்கு, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள கேஎஸ்ஆர் கல்வி நிறுவனத்தில் அக்.14-ம் தேதி நடைபெறவுள்ள தேசிய அளவிலான கருத்தரங்கில், ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது வழங்கப்படவுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT