Last Updated : 18 Nov, 2016 05:46 PM

 

Published : 18 Nov 2016 05:46 PM
Last Updated : 18 Nov 2016 05:46 PM

அமெரிக்காவில் வ.சுப.மாணிக்கனார் நூற்றாண்டு விழா

தமிழறிஞர் வ.சுப. மாணிக்கனாரின் நூற்றாண்டு விழா அமெரிக்காவில் உள்ள மேரிலாண்டில் நவ.19-ல் நடைபெற உள்ளது.

தமிழ் இமயம் என்று அறிஞர்களால் போற்றப்பட்டு, கொண்டாடப்பட்டவர் வ.சுப.மாணிக்கம். கவிஞர், உரைநடை ஆசிரியர், நாடக ஆசிரியர், ஆய்வாளர், உரை ஆசிரியர் என்று பன்முகங்கள் கொண்டு தமிழ்ப் பணி ஆற்றியவர்.

தமிழகத்தில் 1917-ம் ஆண்டு பிறந்த வ.சுப.மாணிக்கனாருக்கு நூற்றாண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாட அமெரிக்காவில் உள்ள மேரிலாண்டைச் சேர்ந்த உலக தமிழ் அறக்கட்டளை தீர்மானித்துள்ளது.

நவம்பர் 19 – தேதி சனிக்கிழமை நடைபெற இவ்விழாவில், சிறப்பு விருந்தினராக சென்னை பச்சையப்பன் கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் வா.மு.சே.முத்து ராமலிங்க ஆண்டவர் கலந்து கொண்டு மூதறிஞர் வ.சுப. மாணிக்கனார் குறித்து சிறப்புரையாற்றுகிறார்.

பன்னாட்டு புறநானூற்று குழுத் தலைவர் முனைவர் பிரபாகரன் தலைமை தாங்குகிறார். வட அமெரிக்க தமிழ்ச் சங்க முன்னாள் தலைவர் நாஞ்சில் பீட்டர் முன்னிலை வகிக்கிறார். இவ்விழாவில் வ.சுப. எனும் தமிழ்க்கடல் நூல் வெளியிடப்பட உள்ளது. பின்னர் முனைவர் வா.மு.சே.ஆண்டவர் மற்றும் உலகத் தமிழ் அறக்கட்டளை நிறுவனர்வா.மு.சே.தமிழ்மணிகண்டன் ஆகியோர் ஏற்புரை வழங்குவர்.

கருத்தரங்கம், உரை அரங்கம், கவியரங்கம், நாடகம், நடனம் ஆகியவையும் இடம் பெற உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x