Published : 30 Nov 2016 10:07 AM
Last Updated : 30 Nov 2016 10:07 AM
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஆண்டியப்பனூர் அரசு சித்த மருத்துவப் பிரிவில், கூழாங்கற்களால் ‘வர்ம நடை பாதை’ அமைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்காக அமைக் கப்பட்டுள்ள இந்த வர்ம பாதையில், வெறும் காலில் தினமும் சிறிது நேரம் நடந்தால், உயர் ரத்த அழுத்தம், தலைவலி, முதுகுவலி, மூட்டுவலி உள் ளிட்ட நோய்களைக் கட்டுப்படுத்து வதாக சில ஆராய்ச்சிகள் தெரி விக்கின்றன.
கூழாங்கற்கள் பரவப்பட்ட நடைபாதையில் தினமும் நடப் பதன் மூலம், முதியோரின் ரத்த அழுத்தம் சிறிதளவு குறை வதாக ஆய்வறிக்கைகள் தெரி விக்கின்றன. அதனை முழுமை யாக சோதித்துப் பார்ப்பதும் மிகவும் அவசியமான ஒன்றாகும். இந்த மருத்துவ முறை தற்போது ‘அக்குபஞ்சர்’, ‘ரிப்லக்ஸாலஜி’ என பல வகைகளில் அழைக் கப்படுகிறது.
இதுகுறித்து ஆண்டியப் பனூர் சித்த மருத்துவப் பிரிவு முதன்மை மருத்துவர் விக்ரம் குமார் கூறும்போது, “வர்ம மருத்துவம் என்பது சித்த மருத்துவத்தில் முக்கிய அங்கம் வகிப்பதாகும். சித்த மருத்துவ கட்டமைப்புகளுள் ஒன்றான வர்ம மருத்துவத்தின் அடிப்படையில் இந்த வர்ம பாதை சித்தா மருத்துவப் பிரிவில் அமைக்கப்பட்டுள்ளது. மனித உடல் முழுவதும் பல வர்ம புள்ளிகள் உள்ளன.
அந்த வர்ம புள்ளிகளை மருத்துவ முறைப்படி தூண்டு வதன் மூலம், பல வகையான நோய்களைக் கட்டுப்படுத்தலாம். பழங்கால யுத்தங்களின்போது அடிபட்ட வீரர்களுக்கு முதல் உதவி மருத்துவமாக வர்மம் இருந்துள்ளது.
கால் பாதங்களில் பல வர்ம புள்ளிகள் உள்ளன. அந்த வர்ம புள்ளிகளைத் தூண்டுவதன் மூலம் சில நோய்களைத் தடுக்கலாம், சிலவற்றைக் கட்டுப்படுத்தலாம் என்பது சித்தர்களின் கண்டுபிடிப்பு.
இந்த அறிவியலை அடிப் படையாகக் கொண்டு, குறிப் பிட்ட நோயாளிகளைத் தேர்ந் தெடுத்து வர்ம நடைபாதையில் நடக்க அறிவுறுத்தியுள்ளோம்.
பொதுமக்கள் வசதிக்காக ஆண்டியப்பனூர் சித்த மருத் துவப் பிரிவில் வர்ம நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. நோய் தாக்கம் இருக்கும் பொதுமக்கள் மருத்துவமனையில் உள்ள சித்தா பிரிவை அணுகலாம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT