Published : 05 Nov 2016 08:46 AM
Last Updated : 05 Nov 2016 08:46 AM
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப் பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைந் ததைக் கொண்டாடும் வேளையில், மொழிவாரிப் பிரிவினையே நேர்மையாக நடத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. மொழிவாரி பிரிவினையை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
மொழிவாரி பிரிவினைக்கு முன்பு கேரளத்தின் தேவிகுளம், பீர்மேடு, கர்நாடகாவின் மண்டியா, பெங்களூரு, ஆந்திரத்தின் சில பகுதிகள் தமிழகத்தோடு இணைந் திருந்தன. பிரிவினையின்போது இவை அனைத்தும் கேரளா, கர்நாடகா, ஆந்திராவுக்கு தாரை வார்க்கப்பட்டன. ‘‘பழையபடியே இருந்திருந்தால் இப்போது காவிரிக் கும் முல்லை பெரியாறுக்கும் நாம் கையேந்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது’’ என்கிறார் கேரளத் தமிழர் கூட்டமைப்பின் அமைப்பாளர் அன்வர் பாலசிங்கம்.
மொழிவாரி பிரிவினையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதாக சொல்லும் அவர் இதுபற்றி மேலும் கூறியதாவது:
மொழிவாரியாக மாநிலங் களைப் பிரிக்க மத்திய அரசால் மாநில மறுசீரமைப்புக் குழு அமைக் கப்பட்டது. அதில் சையத் பசல் அலி, பண்டிட் எச்.என்.குன்ஸ்ரு, கே.எம்.பணிக்கர் ஆகியோர் இருந்தனர். இவர்களுக்கு இந்தியா குறித்த நிலவியல் புரிதல் இல்லை. அதனால்தான் மொழிவாரி மாநிலங் கள் பிரிக்கப்பட்ட பகுதிகளில் எல்லாம் சண்டையும் சச்சரவும் தொடர்கின்றன.
மராட்டியர்கள் 80 சதவீதத்துக்கு மேல் வாழும் பெல்காமை கர்நாடகா வுடன் இணைத்தனர். இதை அங்குள்ள மராட்டியர்கள் ஏற்க வில்லை. 2012-ல் அங்கு மேயராக இருந்த மராட்டியர் ஒருவர் பெல்காமை மீண்டும் மராட்டியத் துடனேயே இணைத்துவிட்டதாக மாமன்றத்தில் தீர்மானமே நிறை வேற்றினார். பெல்காமை தக்க வைத்துக் கொள்வதற்காக ‘பெலகாவி’ என்று பெயரை மாற்றி, அங்கு சட்டமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரை நடத்திக் கொண் டிருக்கிறது கர்நாடகா.
இதேபோல, பிஹாருடன் இணைக்கப்பட்ட சசாரம் பகுதிக் காக மேற்குவங்கம் பிஹார் இடையே சச்சரவுகள் ஓயவில்லை. கோவாவுக்கும் மகாராஷ்டிராவுக் கும் மொழிவாரி பிரிவினை பிரச் சினை இன்னும் முடிந்தபாடில்லை. பண்டேல்கன்ட் பகுதியை குஜராத் துடன் இணைத்ததில் குஜராத் மகாராஷ்டிரா இடையிலான தாவா இன்னும் தீரவில்லை.
இந்தப் பிரச்சினையில் தமிழகத் துக்கு ஏற்பட்ட இழப்பு அதிகம். மொழிவாரி பிரிவினையின்போது கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிடம் 80 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பை தமிழகம் இழந்திருக்கிறது. இது இலங்கை யின் மொத்த பரப்பளவுக்கு சமம்.
எந்த மொழி பேசுவோர் அதிகம் வசிக்கிறார்களோ, அந்தப் பகுதிகள் எல்லாம் அந்த மொழிக் கான மாநிலத்துடன் இணைக்கப் படும் என்கிறது மொழிவாரி பிரிவினைக்கான ஷரத்து. இப்படி இருக்க, தமிழர்கள் அதிகம் வசிக்கும் தேவிகுளம், பீர்மேடு வட்டங்களைக் கேரளாவுடன் சேர்த்தது சதி இல்லையா!
தேயிலை, ஏலக்காய், சுற்றுலா உள்ளிட்ட இனங்கள் மூலமாக மொத்த வரி வருவாயில் 13 சதவீதத்தை இப்பகுதிகளில் இருந்து கேரள அரசு பெறுகிறது. இது தமிழகத்திடம் இருந்து தட்டிப் பறிக்கப்பட்ட வருவாய் இல்லையா! 1965 வரை மூணாறுக்கு கேரளத்தில் இருந்து செல்ல சாலை வசதி கிடையாது. கம்பம் மெட்டு வழியாகத்தான் செல்ல முடியும். தொடர்பே இல்லாத மூணாறு, கேரளாவுடன் சேர்க்கப்பட்டதன் மர்மம் என்ன? மொழிவாரி பிரிவினை குழுவில் கேரளாவைச் சேர்ந்த பணிக்கர் இருந்ததே இதற்கெல்லாம் காரணம்.
உள்நோக்கத்துடன் பிரி வினையை வரையறுத்தவர்கள் அங்குள்ள தமிழர்களின் வாழ் வாதாரங்களையும் உறுதிப்படுத்த வில்லை. தேவிகுளம், பீர்மேடு பகுதியில் 40 ஆண்டுகளுக்கு முன்பு 8 லட்சமாக இருந்த தமிழர்களின் எண்ணிக்கை இப்போது 3 லட்சமாக குறுகிவிட்டது. எஞ்சியவர்கள் தாய் தமிழகம் வந்துவிட்டார்கள்.
கேரளாவில் தமிழர்களுக்காக இருந்த தேவிகுளம், பீர்மேடு சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஆபத்து வந்துவிட்டது. எம்.எம்.சுந்தரம்தான் 1996-ல் பீர்மேடு தொகுதியின் கடைசி எம்எல்ஏ. இவருக்குப் பிறகு, முக்கியக் கட்சிகள் இங்கு தமிழர்களை வேட் பாளராக நிறுத்துவதைத் தவிர்த்து விட்டன. இப்போது தேவிகுளம் மட்டுமே தமிழர்களுக்கான ஒரே தொகுதி. எனவே, கேரளத் தமிழர்களின் வாழ்வாதாரத்துக்கும் தமிழகத்தின் வாழ்வாதாரத்துக்கும் சவாலாக நிற்கும் மொழிவாரி பிரிவினையை மறுபரிசீலனை செய்து அறிக்கையைத் திருத்த வேண்டும் என்று வலியுறுத்து கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT