Last Updated : 22 Sep, 2022 11:15 AM

2  

Published : 22 Sep 2022 11:15 AM
Last Updated : 22 Sep 2022 11:15 AM

கடலூர் அருகே என்ஐஏ சோதனை | பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகி கைது; உறவினர்கள் மறியல்

காட்டுமன்னார்கோவில் அருகே நடந்த என்ஐஏ சோதனை

கடலூர்: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா நிர்வாகியை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கொளக்குடி கிராமத்தில் வசித்து வருபவர் அபூபக்கர் மகன் பையாஸ் அகமது(32). இவர் கடலூர் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாவட்ட தலைவராக உள்ளார். இந்த நிலையில் இன்று(செப்.22) அதிகாலையில் அவரது வீட்டுக்கு வந்த 20-க்கும் மேற்பட்ட என்ஐஏ அதிகாரிகள் அவரது வீட்டை சோதனை செய்தனர்.

பையாஸ் அகமது பயன்படுத்திய மடிக்கணினி மற்றும் இரண்டு செல்போன்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்து அழைத்துச் சென்று சேத்தியாதோப்பு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள், தொண்டர்கள், அவரது உறவினர்கள் சிதம்பரம் - காட்டுமன்னார்கோவில் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து பயாஸ் அகமது வீடு இருக்கும் பகுதியில் என்ஐஏ அதிகாரிகள் தடுப்புகளை அமைத்து யாரையும் உள்ளே விடாமல் அந்த பகுதி முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை நடத்தி இதுவரை 100-க்கும் மேற்பட்டவர்களை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்நிலையில், காட்டுமன்னார்கோவில் பகுதியில் நடந்த என்ஐஏ அதிகாரிகளின் சோதனை இந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x