Published : 05 Nov 2016 11:39 AM
Last Updated : 05 Nov 2016 11:39 AM

தகரத்தில் மேற்கூரை, மின்சார வசதியும் இல்லை: வெப்பத்தில் தவிக்கும் திருவண்ணாமலை அங்கன்வாடி மழலைகள்

திருவண்ணாமலை வடக்குத் தெருவில் உள்ள அங்கன்வாடி மையத்தில் மின்சார வசதி இல்லாததாலும், தகடுகளால் அமைக்கப்பட்ட மேற் கூரையாலும் ஏற்படும் வெப்பத்தின் பிடியில் சிக்கி மழலைகள் தவிக்கின்றனர். மேலும், மையத்தின் முன்பு குப்பை கொட்டப்படுவதால் மழலைகளை தொற்றுநோய் எளிதில் தாக்கும் அபாயம் உள்ளது.

திருவண்ணாமலை வடக்குத் தெரு (வனத்துறை அலுவலகம் எதிரே) காமாட்சி அம்மன் கோயில் அருகே உள்ள அங்கன்வாடி மையத்தில் (எண் - 26) விளையாடி மகிழ்ந்து பொழுதைக் கழிக்க 40 மழலைகள் வருகின்றனர். காலை 8.30 மணிக்கு தொடங்கி மாலை 4.30 மணிக்கு வகுப்பு நிறைவடை கிறது. முற்பகலில் விளையாடி களைத்துப்போன மழலைகளை, பிற்பகலில் உறங்க வைக்க வேண்டி யது பொறுப்பாளரின் கடமை.

அடிப்படைக் கல்வியில் அடியெ டுத்து வைக்கும் மழலைகள், அடிப் படை வசதிகள் இல்லாமல் தவிக்கின் றனர். மையத்தில் உள்ளே 15 நிமிடங் கள் கூட இருக்க முடியாத அளவுக்கு மழலைகளை வெப்பம் வாட்டி வதைக்கிறது. அதற்குக் காரணம், தகடுகள் மூலம் மையத்தின் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. மழலைகளுக்கு உடல்களில் கொப் புளங்கள் வந்து அவதிப்படுகின்ற னர். மையத்தின் உள்ளே காற்றோட் டமான சூழலும் கிடையாது. மின்சார வசதி இல்லாததால் மின் விசிறியைப் பயன்படுத்தவும் இயலவில்லை.

அங்கன்வாடி மையம் முன்பு குப்பை கொட்டப்படுகிறது. உடனுக் குடன் குப்பையை நகராட்சி நிர்வா கம் அகற்றாததால், மழலைகளுக்கு சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. கழிவுகளில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகின்றன. வெப்பத்தின் தாக்கம் மற்றும் தொற்று நோய் ஆபத்தால் அங்கன்வாடி மையத் துக்கு பிள்ளைகளை அனுப்பி வைக்க பெற்றோர் தயங்குகின்றனர். 40 மழலைகள் உள்ள மையத்தில் ஒரு நாளைக்கு 15 மழலைகள் மட்டுமே செல்கின்றனர்.

இதுகுறித்து பெற்றோர் தரப்பில் கூறும்போது, ‘’மின்சார வசதி இல்லாததால் அங்கன்வாடி மையத்தின் உள்ளே சூடாக இருக்கிறது. மின் விளக்குகளும் இல்லாததால் போதிய வெளிச்சம் கிடையாது. மையத்தின் வாசல் முன்பு குப்பையைக் கொட்டி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகின் றனர். இதனால், மதியம் வரை மட்டுமே பிள்ளைகளை அனுப்பி வருகிறோம். மதியத்துக்கு பிறகு வீட்டுக்கு அழைத்து வந்து விடுகிறோம்.

வெப்பத்தால் பிள்ளைகளின் உடலில் கொப்புளங்கள் ஏற்படு கின்றன. குடிநீர் வசதியும் கிடை யாது. சமைக்கவும், பாத்திரங்களை சுத்தம் செய்யவும் தண்ணீர் கிடையாது. கழிப்பறை வசதி இல்லை. இதனால்தான் பிள்ளை களை அனுப்புவதற்கு அச்சப்படு கிறோம்’’. என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x