Published : 25 Nov 2016 10:09 AM
Last Updated : 25 Nov 2016 10:09 AM
எந்த நாட்டில், என்ன மதிப்பிலான பணம் புழக்கத்தில் உள்ளது என வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்வதற்காக 30 நாடுகளின் பணத் தாள்கள், நாணயங்களைச் சேகரித்து காட்சிப்படுத்தி வருகிறார் பாபநாசத்தைச் சேர்ந்த டீ கடைக்காரர்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் கடைவீதியில் டீ கடை நடத்தி வருபவர் வசுமித்ரன்(42). இவர், 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். இவர் சொந்தமாக டீ மற்றும் டிபன் கடை நடத்தி வருகிறார்.
இவர், 10 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் புழக்கத்தில் இருந்த 5 ரூபாய் நோட்டு ஒன்றைப் பார்த்துள்ளார். அந்த நோட்டில், 5 மான்களும், இயற்கைக் காட்சியும் அச்சிடப்பட்டு இருந்ததைப் பார்த்து அதைப் பத்திரப்படுத்தி வைக்க நினைத்துள்ளார்.
அந்த 5 ரூபாய் நோட்டை தன் கடையின் கல்லாப் பெட்டி மேஜையின் மீது உள்ள கண்ணா டிக்கு அடியில் வைத்திருந்தார். கடைக்கு வருபவர்கள் அந்த ரூபாய் நோட்டை ஆச்சரியமாகப் பார்த்துள்ளனர். அதன்பிறகு கடைக்கு வாடிக்கையாளர்கள் வரும்போது புதிதாக கொடுக்கும் நோட்டுகளையும், வித்தியாசமான நோட்டுகள் வரும்போது அதனை யும் பத்திரப்படுத்தி மேஜை மீது காட்சிக்கு வைத்துவிடுவார். இப் படித் தொடங்கிய பழக்கம் நாள டைவில் நாணயங்கள் மற்றும் பல நாட்டு பணத்தைச் சேகரிக்கும் ஆர்வமாக மாறியது.
இதுகுறித்து வசுமித்ரன் கூறி யதாவது: என்னுடைய கடையில் முத லில் 5 ரூபாய் நோட்டை மட்டுமே வைத்திருந்தேன். பின்னர் வந்த புதுப்புது நோட்டுகள், பல நாடு களின் நாணயங்கள், பணத் தாள் களை மேஜைமீது வைத்துவந்தேன்.
வெளிநாட்டில் இருந்து வருபவர் கள் சிலர் கடைக்கு வருவது வழக் கம். அப்படி வரும்போது என்னு டைய ஆர்வத்தைப் பார்த்து, அவர்களுடைய நாட்டின் பணத் தைக் கொடுப்பார்கள். அதற்குப் பதில் இந்திய ரூபாய் நோட்டுகளை தந்துவிடுவேன். என் கடையின் மேஜை மீது அமெரிக்கா, சவுதி அரேபியா, ஈரான், ஈராக், பாகிஸ் தான், எகிப்து, பஹ்ரைன், குவைத், தாய்லாந்து, சீனா, இந்தோனே ஷியா, நேபாளம், நைஜீரியா, லிபியா, மலேஷியா, சிங்கப்பூர் என 30 நாடுகளின் பணத் தாள்கள் உள்ளன.
அதேபோல, இந்தியாவில் அச் சிடப்பட்ட துளையுடன் கூடிய நாணயங்கள், காலணா, அரையணா முதல் தற்போது புழக்கத்தில் உள்ள அனைத்து நாணயங்கள் வரை உள்ளன. இவ்வாறு சுமார் 300 பணத் தாள்கள், 250 நாண யங்கள் உள்ளன. இதனை மேஜை மீது காட்சிக்காக அடுக்கி வைத்துள்ளேன்.
கடைக்கு வரும் வாடிக்கை யாளர்கள் மேஜை அருகே நின்று பார்த்துவிட்டு, இதுகுறித்து விசாரிப்பார்கள். அவற்றைச் சேகரிப்பது குறித்து அவர்களுக்கு நான் ஆர்வமுடன் விளக்குவேன். இது எனக்கு மகிழ்ச்சியை அளிப்பதாக உள்ளது.
ஒருமுறை என் கடைக்கு டீ குடிக்க வந்த சீனாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர், மேஜை மீது காட்சிப்படுத்தப்பட்டிருந்த பல நாட்டு பணத் தாள்களைப் பார்த்து விட்டு, சீன நாட்டின் பணத்தாள் ஒன்றை அன்பளிப்பாக கொடுத்து விட்டுச் சென்றார்.
இதுகுறித்து வருங்கால தலை முறையினர் அறிந்துகொள்ளும் விதமாக இந்த நாணயங்கள், பணத் தாள்களைக் கொண்டு விரை வில் கண்காட்சி நடத்த உள்ளேன் என்றார்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் உள்ள தனது டீ கடையில், பல நாடுகளின் பணத் தாள்கள், நாணயங்களைக் காட்சிக்கு வைத்துள்ள வசுமித்ரன்.
ஒருமுறை என் கடைக்கு டீ குடிக்க வந்த சீனாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர், மேஜை மீது காட்சிப்படுத்தப்பட்டிருந்த பல நாட்டு பணத் தாள்களைப் பார்த்து விட்டு, சீன நாட்டின் பணத்தாள் ஒன்றை அன்பளிப்பாக கொடுத்து விட்டுச் சென்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT