Published : 20 Sep 2022 01:08 PM
Last Updated : 20 Sep 2022 01:08 PM

நகர்ப்புற வாழ்விட வாரிய குடியிருப்புகளை ஆய்வு செய்யும் அண்ணா பல்கலைக்கழகம் 

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் கோவிந்த ராவ் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து.

சென்னை: தமிழகம் முழுவதும் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை சென்னை ஐஐடி உள்ளிட்ட புகழ் பெற்ற கல்வி நிறுவனங்கள் ஆய்வு செய்ய உள்ளன.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தினால் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளின் தரத்தினை பல்வேறு நிலைகளில் உறுதி செய்ய சம்மந்தப்பட்ட மண்டலங்களில் உள்ள புகழ்பெற்ற தொழில்நுட்ப கல்லூரிகளான சென்னை ஐஐடி, திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம், சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் இதர அரசு பொறியியல் நிறுவனங்களை மூன்றாம் தரக்கட்டுப்பாடு குழுவாக நியமனம் செய்ய வாரியத்தால் முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் மூன்றாம் தரப்பு தரக்கட்டுப்பாடு முகமையாக, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் வாரியத்தினால் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளின் தரத்தினை உறுதி செய்ய வாரிய மேலாண்மை இயக்குநர் கோவிந்த ராவ் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x