Published : 17 Sep 2022 02:33 PM
Last Updated : 17 Sep 2022 02:33 PM

“அரசின் மீதான கோபத்தால் குற்றச்சாட்டு” - தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு இல்லை என மா.சுப்பிரமணியன் விளக்கம்

சென்னை: அரசின் மீது உள்ள கோபத்தால் மருந்து தட்டுப்பாடு என்ற குற்றச்சாட்டை ஒரு சிலர் கூறி வருகின்றனர் என்றும், தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு இல்லை என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு உள்ளதாக பல்வேறு புகார்கள் எழுந்து வரும் நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆலோசனை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் மருந்துகள் தட்டுப்பாடு என்று தொடர் செய்திகள் வெளியாகி வருகிறது. இது தவறான செய்தி என்று பலமுறை தெரிவித்திருந்தாலும் கூட மீண்டும் இதுபோன்ற செய்தி வருகிறது.

ஒரு வாரங்களில் 5 அல்லது 6 மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். அப்படி ஆய்வு மேற்கொள்ளும்பொழுது மருத்துவமனையில் உள்ள மருந்து கிடங்கைதான் முதலில் ஆய்வு மேற்கொள்கிறோம். எந்த மருத்துவமனையிலும் மருந்து தட்டுப்பாடு என்பது இல்லை. இதுபோன்ற குற்றச்சாட்டை ஒன்று அல்லது இரண்டு பேர் தேவை இல்லாமல் தெரிவித்து வருகிறார்கள். நிர்வாக ரீதியாக ஒரு சிலர் பணியிடை மாற்றம் செய்து இருக்கிறோம். அப்படி பணியிடம் மாற்றம் செய்தவர்கள் அரசின் மீது உள்ள கோபத்தில் இது போன்ற செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்திற்கு தேவையான அத்தியாவசிய 327 மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு மூன்று மாதங்களுக்கு தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளன. இதற்கு முன்பு வரையிலும் 32 இடத்தில் மட்டும்தான் மருந்து கிடங்து இருந்தது. தற்போது நான்கு மருத்துவக் கிடங்குகள் புதிதாக அமைக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மாவட்டம்தோறும் மருந்து கிடங்கு என்ற நிலை உள்ளது. Iv fluids மருந்து சில இடங்களில் தட்டுப்பாடு இருந்தது உண்மைதான். இதற்கு காரணம் உக்ரைன் போர் இருந்ததால் சில இடங்களில் இறக்குமதி செய்வதற்கு காலதாமதமனது.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு மருந்துகள் தட்டுப்பாடு இருந்தது என்ற செய்தியும் வெளியாகி வருகிறது. அந்தத் திட்டத்திற்கு என்று தேவைப்படும் 32 வகையான மருந்துகள் அந்தந்த மாவட்ட மருந்து கிடங்கில் 3 அல்லது 4 மாத காலத்திற்கான இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதிலும் ஓர் இரண்டு supportive drugs மற்றும் தட்டுப்பாடு இருந்தது உண்மை. அதற்கும் கூட மாற்றிக தமிழ்நாடு மருத்துவர் பணிகள் கழகம் supportive drugs க்கு ஏற்ற மாற்று மருந்துகள் அனுப்பி வைத்திருக்கிறார்கள். மருந்து தட்டுப்பாடு இருக்கிறது என்று செய்தி வெளியிட வேண்டும் என்றால் மருந்து கிடங்கை வந்து நேரடியாக ஆய்வு மேற்கொள்ள அனுமதி வழங்குகிறோம். பொது மக்கள் அப்படி மருந்து தட்டுப்பாடு இருந்தால் 104 புகார் எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்" என்று அமைச்சர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x