Published : 17 Sep 2022 05:32 AM
Last Updated : 17 Sep 2022 05:32 AM
முனிச்: இதுகுறித்து ஜெர்மனியின் மூன்சென் தமிழ்ச் சங்கத் தலைவர் செல்வகுமார் பெரியசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்து தமிழ் திசையின் 10-வது ஆண்டு தொடக்கத்துக்கு வாழ்த்துகள். இந்த அற்புதமான தருணத்தில் இந்து தமிழ் திசை குழுவினருடன் வாழ்த்துகளை பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். மக்களுக்கு சரியான செய்திகளை கொண்டு சேர்ப்பதில் உங்கள் குழுவினரின் உறுதியான முயற்சிகள், இந்த சமூகத்தில் அளப்பரிய மாற்றங்களை நிகழ்த்தி உள்ளது.
இந்த நேரத்தில் ஜெர்மனியில் தமிழ் மொழிக்காக உங்கள் சேவையை மகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்து பார்க்கிறேன். ‘ஜெர்மனியின் கொலோன் பல்கலைக்கழகத்தில் நிதிப் பிரச்சினையால் மூடப்படும் நிலையில் இருந்த தமிழ்த் துறையை காப்பாற்றுங்கள்’ என்ற பிரச்சாரத்தின் போது, இந்து தமிழ் திசையின் சிறப்பான பணியை ஜெர்மனியிலும் உலகின் பல நாடுகளிலும் வாழும் தமிழர்கள் கண்கூடாகப் பார்த்தனர்.
இந்து தமிழ் திசை குழுவினர் நேர்மையான மற்றும் தொடர்ந்து மேற்கொண்ட முயற்சிகளால் இந்த விவகாரம் தமிழக அரசின்கவனத்துக்கு சென்றதை நாங்கள்மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொள்கிறோம்.
அதன் காரணமாகவே கொலோன் பல்கலை.யில் 2023-ம் ஆண்டு வரை தமிழ்த் துறைக்கு அனுமதி வழங்கப்பட்டது. கடந்த 9 ஆண்டுகளாக இந்து தமிழ் திசை நாளிதழ் செய்த பல சிறப்பான பணிகளில் இந்த சம்பவம் ஒரு உதாரணம்தான்.
எனவே, இந்து தமிழ் திசை நாளிதழ் 10-வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் அற்புதமான தருணத்தை நீங்கள் அனைவரும் கொண்டாட வேண்டும். அத்துடன் வரும் காலங்களில் இன்னும் பல வெற்றிகளை குவிக்க வாழ்த்துகிறேன்.
இவ்வாறு மூன்சென் தமிழ்ச் சங்கத் தலைவர் செல்வகுமார் பெரியசாமி கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT