Published : 16 Sep 2022 11:47 AM
Last Updated : 16 Sep 2022 11:47 AM
சென்னை: சென்னையில் 37 பள்ளிகளில் 5900 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
தமிழகம் முழுவதும், அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (15ம் தேதி) மதுரையில் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து இன்று அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தனர்.
சென்னை மாநகராட்சியின் கல்வித் துறை கீழ் திருவொற்றியூர், மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம் ஆகிய நான்கு மண்டலங்களில் உள்ள, 37 பள்ளிகளில் முதற்கட்டமாக இத்திட்டம் தொடங்கப்படுகிறது. இதில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் 5,941 மாணவர்கள் பயனடைய உள்ளனர்.
இதற்காக, 6 இடங்களில் ஒருங்கிணைந்த சமையல் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி, எண்ணுாரில் இரண்டு இடங்கள், மாதவரம், கொடுங்கையூர், கொருக்குப்பேட்டை, ராயபுரம் ஆகிய ஆறு இடங்களில் ஒருங்கிணைந்த சமையற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாதவரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சமையல் கூடத்தில் இருந்து உணவு கொண்டு செல்லும் வாகனத்தை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து மாதவரம் ராஜாஜி தெருவில் உள்ள சென்னை தொடக்க பள்ளியில் மாணவர்ளுக்கு உணவு வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT