Published : 30 Nov 2016 08:08 AM
Last Updated : 30 Nov 2016 08:08 AM
அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஸ்பெஷாலிட்டி, சூப்பர் ஸ்பெஷா லிட்டி உயர் கல்வி படிக்கும் மருத்துவர்கள், தனியார் மருத்துவ மனைகளுக்குச் செல்ல ஆர்வம் காட்டுவதால், அரசு மருத்துவமனை களில் இந்த மருத்துவர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிக்க 2,555 இடங்களும், எம்டி, எம்எஸ் ஸ்பெஷாலிட்டி படிப்புகள், டிஎம், எம்சிஎச் சூப்பர் ஸ்பெஷா லிட்டி படிப்புகளுக்கு 2,304 இடங் களும் உள்ளன. அரசு, தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் நுழைவுத் தேர்வு அடிப்படையில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்டி, எம்எஸ் படிப்புகளையும், அதன்பின் எம்சிஎச், டிஎம் படிப்புகளையும் படிக் கின்றனர். அரசு செலவில் ஸ்பெஷா லிட்டி, சூப்பர் ஸ்பெஷாலிட்டி உயர் கல்வி படிக்கும் இந்த மருத்து வர்கள், படிப்பை முடித்ததும், அரசு மருத்துவமனைகளில் போதிய ஊதியம் கிடைக்காததால் தனியார் மருத்துவமனைகளுக்குப் பணிக்கு செல்வதாகக் கூறப்படுகிறது. அதனால், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட மற்றும் தாலுகா அரசு மருத்துவமனைகளில் எம்சிஎச், டிஎம், எம்எஸ் மற்றும் எம்டி படித்த மருத்துவர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தற்போது ஏழை நோயாளி களுக்கும் உயர் சிகிச்சை கிடைக்கும் வகையில், புதிதாக மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகள், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் தொடங்கப் படுகின்றன. இந்த மருத்துவமனை களில் பணிபுரிய போதிய ஸ்பெஷா லிட்டி, சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவர்கள் இல்லை.
ஸ்பெஷாலிட்டி, சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்புகளை அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிக்க ரூ.3 முதல் 4 லட்சம் வரையே செலவாகிறது. இந்தப் படிப்புகளைத் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படிக்க, குறைந்தபட்சம் ரூ.50 லட்சம் முதல் ஒரு கோடிக்கு ரூபாய்க்கு மேல் செலவாகிறது. அதனால், அரசு நிதியுதவியில் இந்த படிப்புகளைப் படிக்க மருத்துவர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது.
அரசு செலவில் ஸ்பெஷாலிட்டி, சூப்பர் ஸ்பெஷாலிட்டி படித்த மருத்துவர்கள் ஓய்வுபெறும் வரை அரசு மருத்துவமனைகளிலேயே பணிபுரிய வேண்டும். ஆனால், அவர்களில் பலர், படிக்கச் செல்கிறோம், தங்களுக்கு ஊதியம் வேண்டாம் என நீண்ட விடுப்பில் செல்கின்றனர். அதன்பின் இவர்கள் வேறு எங்காவது சென்றுவிடுகிறார்கள். இவர்கள் திரும்ப பணிக்கு வந்துள்ளனரா என்பதை அரசு கண்காணிக்கவும், நடவடிக்கை எடுக்கவும் தவறுகிறது.
தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிந்துவிட்டு அரசு செலவில் எம்சிஎச், டிஎம், எம்டி, எம்எஸ் படிப்பவர்கள் முற்றிலும் தனியார் மருத்துவமனை பணிக்கே செல்கின்றனர். இவர்கள், முதல் 2 ஆண்டுகள் கட்டாயம், அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய வேண்டும். ஆனால், இவர்கள் படித்து முடிந்ததும் அரசு மருத்துவமனைகளுக்கு வராமல் தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்றுவிடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதைத் தடுக்க அரசு கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஊதியம் குறைவு
இதுகுறித்து அரசு மருத்துவர்கள் கூறும்போது, ‘‘எம்எஸ், எம்டி, எம்சிஎச், டிஎம் படித்தவர்களுக்கு இரண்டு ஊதிய உயர்வே வழங்கப்படுகிறது. அதுவும் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் மட்டுமே ஊதியம் கூடுவதால் தனியார் மருத்துவமனைகளை ஒப்பிடும்போது ஊதியம் மிகவும் குறைவாக உள்ளது. இதே படிப்பு படித்தவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் ஒன்றேகால் முதல் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை ஊதியம் வழங்கப்படுகிறது” என்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க மாநிலத் தலைவர் செந்தில் கூறும்போது, “அரசு மருத்துவர்கள் யாரும் தனியாருக்குச் செல்வது கிடையாது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படித்தவர்கள், இவ்வாறு செல்லலாம். இதைத் தடுக்க 7-வது ஊதியக்குழு பரிந்துரையில் ஸ்பெஷாலிட்டி, சூப்பர் ஸ்பெஷாலிட்டி படித்தவர்களுக்கு கூடுதல் ஊதியம் வழங்க முக்கிய கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT